சிபிஎஸ்இ வாரியம் 2020: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு 2020 ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு முறை மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ட்விட்டரில் செய்துள்ளது.
அனைத்து பாடங்களிலும் இருபது மதிப்பெண்களை உள் மதிப்பீடு அல்லது ப்ராக்டிகளாகவும், வாரியத் தேர்வுகளில் அப்ஜக்டிவ் கேள்விகளையும் 2020 ஆம் ஆண்டிற்கான தேர்வில் அறிமுகப்படுத்தியுள்ளது சிபிஎஸ்இ வாரியம்.
விரிவான விடைகளிலிருந்து அப்ஜக்டிவ் கேள்விகளாக மாற்றப்பட்டிருப்பதால் மாணவர்கள் சிந்திக்க வைக்க முடியும் என்றும், தேர்வு எழுத அதிக நேரமும் கிடைக்கும். எல்லா பாடத் திட்டத்திற்கும் ப்ராக்டிகள் கொண்டு வந்திருப்பதால் மாணவர்களின் நுனரிவுத் திறன் மேம்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ வாரியம் கருத்து தெரிவித்துள்ளது. இருப்பினும், அனைத்து கல்வியாளர்களும் இந்தக் கருத்தை ஏற்பதாய் இல்லை.
சிபிஎஸ்இ- யின் இன்னொரு மாற்றங்களாக கருதப்படுவது பத்தாம் வகுப்பு கணித பாடத்தை: கணிதம்-தரநிலை(லெவல்-1 ), கணிதம் எளிதான நிலை(லெவல்-2 ) என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருப்பது தான். மாணவர்கள் இந்த இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். இருந்தாலும், x1/x11 வகுப்புகளில் கணிதத்தை எடுக்க விரும்பினால், அவர்கள் லெவல்-1 பேப்பரில் தேர்ச்சி பெற வேண்டும்.
பெற்றோர் சங்கத் தலைவர், இதைப் பற்றி தெரிவிக்கையில் , “இந்தியாவில் அனைத்து போட்டித் தேர்வுகள்(UPSC,NEET,JEE) பெரும்பாலானவை MCQ அடிப்படையில் தான் உள்ளது. இதேபோன்றே வடிவத்தில் போர்டு தேர்வுகளையும் சிபிஎஸ்சி நடத்துவது மிகவும் சரியானது. இந்த கேள்விகள் ஒரு மாணவரின் கருத்துகளை சோதிக்கும். பழைய விரிவான கேள்விகளில் அசிரியரின் மன நிலையைப் பொறுத்தே மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கும். அந்த பிரச்சனை தற்போது முற்றிலும் ஒழியும் ” என்று தெரிவித்தார்.
ஆனால், இது தேர்வுகளை மிகவும் எளிதாக்கும் என்று பல கல்வியாளர்கள் வாதிட்டனர். “இது வரியங்களுக்குளே நடக்கும் மல்யுத்தம். மாநில வாரியங்கள் மற்றும் மத்திய வாரியங்கள் ஆடம்பரமாக பெயர்களை மாற்றி திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. ஆனால், இது மாணவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பது அவர்கள் யோசிப்பதே இல்லை".
கல்வி ஆலோசகர் சுவாதி சலுகே , இதை பற்றி தெரிவிக்கையில்," அனைத்து கல்வி சீர்திருத்தங்களையும் 9 -12 வகுப்புத் தேர்வுகளை சுற்றியே நடக்கிறது. கற்பித்தல்-கற்றல் இடையிலான உறவுகளை புதுப்பித்தல், ஆசிரியர்களுக்கான கருத்தியளில் புது சித்தாந்தங்களை உருவாக்குதல் போன்றவைகளை நாம் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.
சிபிஎஸ்இ வாரியத்தின் இந்த மாற்றம் சீர்திருத்தத்தைக் கொண்டு வருமா? என்பதை பொருத்து தான் பார்க்க வேண்டும்.