சிபிஎஸ்இ மாணவர்களுக்கு டிஜிட்டல் கிரியேட்டிவிட்டி போட்டி: வென்றால் கலிபோர்னியா போகலாம்

வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அடோப் தலைமையகத்தைப் பார்வையிட ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும்

By: Updated: October 7, 2019, 07:05:04 AM

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) , டிஜிட்டல் கல்வியறிவு மற்றும் மாணவர்களின் ஆரம்பகால படைப்பு திறன் மேம்படுத்தி,  காந்திய சிதாந்தந்தங்களை மாணவர்கள் மத்தியில் எழுப்பும் முயற்சியாக பிரபல நிறுவனமான அடோப் ( Adobe) உடன் கை கோர்த்துள்ளது.

அடோப் கிரியேட்டிவிட்டி சேலஞ்ச் என்ற  போர்டல் இதற்காக பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அடோப் கிரியேட்டிவ் கிளவுட் பயன்படுத்தி மாணவர்கள் நிலையான வளர்ச்சி மற்றும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை தொடர்பான  ஆவணங்களைத் தயார் செய்தி  சமர்ப்பிக்க வேண்டும். போட்டோக்ராப்ஸ்/அனிமேஷன்/வீடியோ/வெப் பேஜ்/கிராபிக்ஸ் போன்றவைகளில் எதை வேண்டுமானாலும் சமர்பிக்கலாம்.

நவம்பர் 1 முதல் 20 தேதிக்குள் கிரியேட்டிவிட்டி சேலஞ்ச் போர்டலில்  சமர்பிக்க வேண்டும். 6 முதல் 12 படிக்கும் மாணவர்கள் வரை இப்போட்டியில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   டிசம்பர் 2019 இல், போட்டி நடுவர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டபடி, சிறந்த சமர்ப்பிப்புகளைக் கொண்ட  வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள அடோப் தலைமையகத்தைப் பார்வையிட ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும் . 20,000 க்கும் அதிகமான சிபிஎஸ்சி பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“டிஜிட்டல் இந்தியாவின் ஒரு பகுதியாக, சிபிஎஸ்இயில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் கல்வி பணியில் பயன்படுத்த பல முயற்சிகளை செய்து வருகிறோம். அதன் ஒரு நிகழ்வாக மகாத்மா காந்தியின் மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல  அடோப் நிறுவனத்துடன் கூட்டாளராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று சிபிஎஸ்இ தலைவர் டாக்டர் அனிதா கார்வால் கூறினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Cbse adobe creativity challenge theme gandhiji adobe cloud cbse digital india competition adobe cloud to submit projects

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X