மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான மாணவர்களின் பதிவு மற்றும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை (LoC) சமர்ப்பிப்பது தொடர்பாக பெற்றோருக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரியான தரவு சமர்ப்பிப்பு என்பது தேர்வுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒரு முக்கியமான தேவையாகும்
அந்த அறிவிப்பில், 'சி.பி.எஸ்.இ IX/XI வகுப்பு மாணவர்களின் பதிவு செயல்முறை மற்றும் X/XII வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை (LOC) சமர்ப்பிப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
”11 மற்றும் 9 வகுப்பு அல்லது 10 மற்றும் 12 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, சரியான தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பாடங்களைச் சமர்ப்பிப்பது உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் தேர்வு சுமுகமாக நடத்துவதற்கு மிகவும் முக்கியமானது," என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 16 வரை பதிவு செய்துக் கொள்ளலாம். தவறியவர்கள் அக்டோபர் 24 வரை அபராதத்துடன் பதிவு செய்துக் கொள்ளலாம்.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 4 வரை விண்ணப்பதாரர்களின் பட்டியலை சமர்ப்பிக்கலாம். தவறியவர்கள் அக்டோபர் 15க்குள் அபராதத்துடன் விண்ணப்பதாரர்களின் பட்டியலை சமர்ப்பிக்கலாம்.
10 மற்றும் 12 வகுப்புகளுக்கு, முதன்மைத் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களின் பட்டியல் சமர்ப்பிப்பு முடிந்ததும் பாடத் திருத்தம் எதுவும் செய்யப்படாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூறுகிறது. ஏதேனும் இருந்தால் துணைத் தேர்வுக்கு மட்டுமே பரிசீலிக்கப்படும். அத்தகைய மாணவர்கள் தாங்கள் விண்ணப்பதாரர்களின் பட்டியலில் சமர்ப்பித்த பாடங்களில் முதன்மைத் தேர்வு எழுதுவது குறித்து முடிவு செய்துக் கொள்ளலாம். இருப்பினும், வாரியத்தின் தேர்வு விதிகளின்படி அவற்றின் முடிவுகள் அறிவிக்கப்படும். எனவே, மேற்கண்ட சிக்கல்களைத் தவிர்க்க, பெற்றோருக்கு பின்வரும் கோரிக்கைகளை சி.பி.எஸ்.இ வைத்துள்ளது:
பதிவு மற்றும் விண்ணப்பதாரர்களின் பட்டியலுக்கான தகவலை ஒப்புக் கொள்ளும்போது கவனமாக இருங்கள்.
பதிவு மற்றும் விண்ணப்பதாரர்களின் பட்டியலுக்காக உங்கள் மாணவரின் தனிப்பட்ட தரவு சரியாக நிரப்பப்பட வேண்டும்.
விரிவுபடுத்தப்பட்ட படிவத்துடன் கூடிய அனைத்து பெயர்களும் நிரப்பப்பட்டிருக்கலாம், குறுகிய பெயர்கள் அல்ல, ஆவணங்களில் விரிவாக்கப்பட்ட வடிவத்தில் பெயர்கள் தேவை.
பல நாடுகளின் தேவையாக இருப்பதால், உங்கள் குழந்தை முன்னேறத் திட்டமிடும் பட்சத்தில் குடும்பப்பெயர் கொடுக்கப்பட வேண்டும்.
பிறந்த தேதி எல்லா வகையிலும் சரியாக இருக்க வேண்டும்.
தரவைச் சமர்ப்பிக்கும் போது, உங்கள் குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால், பாஸ்போர்ட்டில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களும் சரிபார்க்கப்படலாம்.
முக்கியத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களின் பட்டியலை சமர்ப்பித்த பிறகு எந்த மாற்றமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதால், 10 மற்றும் 12 வகுப்புகளின் விண்ணப்பம் மீது உரிய கவனத்துடன் பாடங்கள் நிரப்பப்பட வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தரவுகளும் சரியாக இருக்க வேண்டும் என்பது பெற்றோரின் பொறுப்பாகும்.
தேதி முடிந்தவுடன், எந்த தேதியும் நீட்டிக்கப்படாது என்பதால், பெற்றோர்கள் பள்ளிகளுக்குச் சென்று பதிவு மற்றும் விண்ணப்பம் ஆகியவற்றை சரியான நேரத்தில் சமர்ப்பிப்பதில் அவர்களுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் தகவலுக்கு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் சி.பி.எஸ்.இ.,யின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“