cbse-affiliated-schools-are-advised-to-used-only-new-political-map-of-india : மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது சுற்றறிக்கையில் அனைத்து பள்ளிகளும் புது இந்திய அரசியல் வரைபடத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது. சமூக அறிவியல் பாடத்தில் இந்தியா வரைப்படம் முக்கியாமான பங்காக கருதப்படும்.
Advertisment
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி சர்வே ஜெனரல் ஆப் இந்தியா இந்தியாவின் புதிய அரசியல் வரைபடத்தை தயார் செய்தது .
இந்த, புதிய இந்தியாவின் வரைப்படம் சர்வே ஜெனரல் ஆப் இந்தியா என்ற அதன் இணையதளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், குறிப்பிட்ட புவியியல் பகுதிகளுக்கான புதிய கல்வித் தொடர் வரைபடங்களையும் சர்வே ஜெனரல் ஆப் இந்தியா தயாரித்து வருகிறது. இதனையும், ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ சுற்றறிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய அரசால் வெளியிடப்பட்ட புது அரசியல் வரைப்படம்:
தற்போது, இந்தியாவில் இருக்கும் யூனியன் பிரேதேசங்கள்: