சிபிஎஸ்சி 10/12 வரியைத் தேர்வுகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பரவி வரும் போலி செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஒரு அறிவிப்பானையை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10/ 12 வகுப்ப்பிறகான பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட்டது.
அதேபோன்று சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசு கல்லூரி ஆசிரியர்கள் சம்பள உயர்வு, 280% வரை அதிகரிப்பு
12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 20ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குடியுரிமை திருத்தம் சட்டம் போன்றவைகளுக்காக இந்த வாரியத் தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்படுவதாக சமூக வலைத் தளங்களில் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த வதந்திகள் முற்றிலும் தவறானது என்று தற்போது சிபிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற தவறான செய்திககள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மானவர்களும் பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவிப்பானையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: வேகமெடுக்கும் விசாரணை, டிபிஐ ஆவண கிளார்க் கைது
மேலும், ட்விட்டர், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் 10/12 வாரியத் தேர்வு தொடர்பாக வரும் எந்த அதிகாரமற்ற தகவல்களையும் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்சி கேட்டுக் கொண்டுள்ளது.