மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளுக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOPs) வெளியிட்டுள்ளது. 2024-25 கல்வி அமர்வுக்கான செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள் மற்றும் உள் மதிப்பீடு ஆகியவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கும் ஜனவரி 1, 2025 முதல் நடைபெறும்.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE Board 2024-25 Exams: Guidelines issued for Class 10, 12 practical exams
குளிர்கால பள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வுகள் நடந்து வருகிறது, இவை டிசம்பர் 5-ஆம் தேதி முடிவடையும் நிலையில், வழக்கமான அமர்வு பள்ளிகளில் நடைமுறைத் தேர்வுகள் ஜனவரி 1 முதல் பிப்ரவரி 14, 2025 வரை நடைபெறும். தியரி தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும்.
மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கான 10, 12 வகுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின் பட்டியலையும் சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறும், அட்டவணையின்படி மதிப்பீட்டை முடிக்கவும் மற்றும் சரியான மதிப்பெண்கள் இணைய போர்ட்டலில் பதிவேற்றப்படுவதை உறுதிசெய்யவும் வாரியம் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
செய்முறைத் தேர்வுகளின் மதிப்பெண்கள், திட்டப்பணிகள், உள் மதிப்பீட்டு மதிப்பெண்கள் தனியார் மாணவர்களைப் பொறுத்தமட்டில் தேர்வு விதிகளின்படி வாரியத்தின் கொள்கையின்படி வழங்கப்படும்.
செய்முறைத் தேர்வுகள் அல்லது திட்ட மதிப்பீட்டிற்கான கொள்கையின்படி, ஒரு வெளிப்புற ஆய்வாளரும் உள் ஆய்வாளரும் இருப்பார்கள். 10 ஆம் வகுப்புக்கு வெளி ஆய்வாளர் எவரும் நியமிக்கப்பட மாட்டார்கள், ஆனால் 12 ஆம் வகுப்புக்கு, குறிப்பிட்ட பாடங்களில் செய்முறைத் தேர்வுகள் மற்றும் திட்ட மதிப்பீடுகளை நடத்துவதற்கு ஒவ்வொரு பள்ளியிலும் வெளி ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
செய்முறை/திட்ட மதிப்பீட்டின் சிறந்த மேலாண்மை மற்றும் மதிப்பெண்களைப் பதிவேற்றம் செய்ய பள்ளிகள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 30 மாணவர்களைக் கொண்ட தொகுதிகளை உருவாக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. நியாயமான மற்றும் முறையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக, 30 மாணவர்களின் எண்ணிக்கைக்கு மேல் இருந்தால், செய்முறைத் தேர்வுகள் ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று அமர்வுகளில் நடத்தப்பட வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.