Advertisment

சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

CBSE Board 10th 12th Result 2024: சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், மதிப்பெண் அட்டைகள் cbse.gov.in இணையதளத்தில் கிடைக்கும்.

author-image
WebDesk
New Update
cbse 1

சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பற்றி உலவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை சி.பி.எஸ்.இ-யின் சுற்றறிக்கை நிராகரித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளைப் பற்றி உலவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை சி.பி.எஸ்.இ-யின் சுற்றறிக்கை நிராகரித்துள்ளது. சி.பி.எஸ்.இ, 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் பற்றி அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in தளத்தில் பதிவேற்றப்படும் அறிவிப்பை மட்டுமே நம்புமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: CBSE Board Class 10th, 12th Results 2024 Date: Here’s what cbseresults.nic.in claims

CBSE Board 10th 12th Result 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதிக்குப் பிறகு அறிவிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in-ல் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், cbse.gov.in இணையதளத்தில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து எந்த உறுதிப்படுத்தலும் இல்லை.

CBSE 10th 12th Results 2024: உமாங் செயலி (Umang app)மூலம் மார்க் ஷீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி, cbse.gov.in, results.digilocker.gov.in சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு 12-ம் வகுப்பு முடிவுகள் cbse.gov.in-ல் வெளியிடப்படும் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், இந்த பக்கத்தில் தகவல் வழங்கப்படும்.

சமீபகாலமாக, பல போலி சுற்றறிக்கைகள் சமூக ஊடக தளங்களில் சி.பி.எஸ்.இ 10, 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மற்றும் நேரத்தைக் கூறி பரப்பப்படுகின்றன. இருப்பினும், சி.பி.எஸ்.இ இந்த சுற்றறிக்கைகளை நிராகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in-ல் பதிவேற்றப்படும் அறிவிப்பை மட்டுமே நம்புமாறு மாணவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சி.பி.எஸ்.இ-ன் பெயர் மற்றும் லோகோவைப் பயன்படுத்துவதாகக் கண்டறியப்பட்ட சமூக வலைதளப் பக்கங்களின் பட்டியலையும் சி.பி.எஸ்.இ முன்பு வெளியிட்டது.

சி.பி.எஸ்.இ-யைப் போல, போலியான பல கணக்குகள் உள்ளன. இருப்பினும், '@cbseindia29' என்ற எக்ஸ் பக்கம் சி.பி.எஸ்.இ-யின் ஒரே ஒரு அதிகாரப்பூர்வ கணக்கு மட்டுமே உள்ளது என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சில போலி கணக்குகளை இங்கே உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம். @Cbse_official, @cbseboard, @CBSENEWSINDIA, @CBSEupdates, @CBSE_Results, @cbse_guide, @cbseexamresults, @cbse_news, @CBSE_HQ, @cbse_nic_in, @cbscExam,

சி.பி.எஸ்.இ-யைப் போல, போலியான, எக்ஸ் கணக்குகள் மூலம் தவறான தகவல்களைப் பரப்பும், கிட்டத்தட்ட 30 எக்ஸ் சமூக வலைதளப் பக்கங்களை சி.பி.எஸ்.இ பட்டியலிட்டுள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டில், 10, 12-ம் வகுப்பு முடிவுகள் மே 12, 2023-ல் அறிவிக்கப்பட்டன. 

சி.பி.எஸ்.இ முடிவுகள் வெளியானதும், மாணவர்கள் தங்கள் 10, 12-ம் வகுப்பு முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in-ல் சரிபார்க்க முடியும். இது தவிர, உமாங் மொபைல் செயலி, டிஜிலாக்கர் மற்றும் ஐவிஆர்எஸ் அமைப்பு வழியாகவும் மாணவர்கள் தங்கள் வாரியத் தேர்வு முடிவுகளைச் சரிபார்க்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment