வரும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் அப்ளிகேஷன் சார்ந்த கேள்விகள் அறிமுகப்படுத்தும் என்று சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இம்மானுவேல் கூறினார்.
“ ஆய்வு அடிப்படையிலான கேள்விகள் அதிகரிக்கப்படும். மாணவர்கள் கொடுக்கப்பட்ட பத்தியை வாசித்து கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். அறிவை மட்டும் வளர்க்காமல்,வாசிப்பு, புரிதல், கற்றல் தன்மை போன்ற 21-ம் நூற்றாண்டு திறமைகளுக்கு ஏற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் கேள்விகள் இருக்கும்" என்று தெரிவித்தார்.
மதிப்பெண் பட்டியல் அடிப்படையிலான கல்விக்குப் பதிலாக, கற்றல் அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பெரியதொரு மாற்றத்தை எற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிபிஎஸ்இ ஏற்கனவே புதிய கேள்வி வகைகள் தொடர்பான மாதிரி ஆவணங்களை வெளியிட்டுள்ளது என்றும் இம்மானுவேல் கூறினார்.
தகுதி அடிப்படையிலான கல்வி மற்றும் கற்றல் முடிவுகளை நோக்கி பயணிக்கும் ஒரு பகுதியாக இதை வாரியம் அறிமுகப்படுத்துகிறது. இது போன்ற கேள்விகள் உண்மையான வாழ்க்கையில் தீர்வுகளைக் காண்பதற்கு மாற்றப்படலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பொது முடக்க காலத்தை முன்னிட்டு, பல மாதங்களாக வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து, 12ம் வகுப்பில் 30 சதவீத பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ முன்னதாக குறைத்தது. சில மாநிலங்களில் மெல்லிய வருகையுடன் பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. பள்ளிகள் மீண்டும் முழுமையாக செயல்படத் தொடங்கியதும், வாரியத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மீது அதிகம் கவனம் செலுத்தப்படும் என்று சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் ஒருவர் தெரிவித்தார்.