சி.பி.எஸ்.இ 10, 12 தேர்ச்சிக்கான மதிப்பெண்களில் மாற்றம்.. தகவல் உள்ளே
CBSE Board Pass Criteria 2020: CBSE Board Pass Criteria 2020: 33 சதவீத விதிப்படி, வேட்பாளர்கள் தியரி பேப்பரில் 26 மதிப்பெண்கள் பெற வேண்டும். உள் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற, ஆறு மதிப்பெண்கள் பெற வேண்டும்.
CBSE 10th 12th Board Revised Pass Marks: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி, மாணவர் ஒரு பாடத்திற்கு ஒவ்வொரு மதிப்பீட்டு பிரிவிலும் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும், இரண்டு முதல் மூன்று அசஸ்மென்ட் வகைகள் உள்ளன. அதாவது-தியரி பேப்பர், நடைமுறைத் தேர்வு அல்லது உள் மதிப்பீடு.
Advertisment
சிபிஎஸ்இ-ன் பெரும்பாலான பாடங்கள்,தியரி பேப்பர் மற்றும் நடைமுறை பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நடைமுறைத் தேர்வுக்கு 20 மதிப்பெண்களும், தியரி பேபர்களுக்கு 80 மதிப்பெண்களும் இருப்பது வழக்கம். சமீபத்திய சிபிஎஸ்இ சுற்றறிக்கையின்படி, 10 ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளுக்கு தோன்றும் மாணவர்கள், ஒவ்வொன்றிலும் (தியரி & நடைமுறைத் தேர்வு ) 33 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
33 சதவீத விதிப்படி, வேட்பாளர்கள் தியரி பேப்பரில் 26 மதிப்பெண்கள் பெற வேண்டும். உள் மதிப்பீட்டில் (20 மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற, ஆறு மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இருப்பினும், 30 மதிப்பெண்களைக் குறிக்கும் நடைமுறை பாடங்களுக்கு , வேட்பாளர்கள் தேர்ச்சி பெற மதிப்பெண்கள் எதுவும் பெற வேண்டியதில்லை. தியரி பேப்பரில் மீதமுள்ள 70 மதிப்பெண்களுக்கு, தேர்ச்சி பெற வேட்பாளர்கள் 23 மதிப்பெண்கள் பெற வேண்டும்.