2020 CBSE Board Exam Date Sheet: சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு தேதி விரைவில் வெளியாக உள்ளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு ஜனவரி 1ம் தேதியில் துவங்கி பிப்ரவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே, எழுத்துத்தேர்வு தேதிகள், டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, சிபிஎஸ்இ தேர்வு மார்ச் மாதத்திற்கு பதிலாக, பிப்ரவரி மாத்திலேயே நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
2018க்கு முன்புவரை, சிபிஎஸ்இ தேர்வுகள் மார்ச் - ஏப்ரல் மாதங்களிலேயே நடைபெற்று வந்தன. இதற்கான தேர்வு தேதி, ஜனவரி முதல் வாரத்தில் வெளியாகி வந்தன. இந்நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகம், தேர்வுகளை ஒருமாதம் முன்கூட்டியே நடத்தி, தேர்வு முடிவுகளையும் உடனுக்குடன் வெளியிட்டு, மாணவர்கள் மேற்படிப்புக்கு எளிதில் திட்டமிடும் வகையில் சிபிஎஸ்இ செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு ஆண்டு சிபிஎஸ்இ தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், தேர்வுகளும் முன்கூட்டியே நடத்த திட்டமிட்டிருப்பதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2018)10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 21ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15ம் தேதியும் துவங்குவதாக , டிசம்பர் 24ம் தேதி வெளியிடப்பட்ட தேர்வு தேதிகள் குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சிபிஎஸ்இ நிர்வாகம், தங்கள் மாணவர்களுக்கு 30 ஆயிரம் காம்பினேசன்களில் தேர்வுகளை நடத்தி வருகின்றது. இதில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 240 பாடப்பிரிவுகளில் தேர்வுகளை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.