CBSE Board Exams 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு போர்டு தியரி தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்களை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் சி.பி.எஸ்.இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in/ என்ற பக்கத்தில் இருந்து தங்களின் அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE Board Exams 2024 Admit Card Out: How to download at cbse.gov.in
CBSE போர்டு தேர்வுகள் 2024 பிப்ரவரி 15 அன்று தொடங்கும். கடந்த ஆண்டு கால அட்டவணையை உருவாக்கும் போது JEE மெயின் மற்றும் NEET போன்ற போட்டித் தேர்வுகளின் தேதிகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
CBSE போர்டு தேர்வுகள் 2024: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும் — https://www.cbse.gov.in/
படி 2: முகப்புப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஹால் டிக்கெட் இணைப்பைக் கிளிக் செய்யவும்
படி 3: பயனர் ஐ.டி மற்றும் கடவுச்சொல் போன்ற உங்கள் விவரங்களை நிரப்பவும்
படி 4: ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கவும்
படி 5: எதிர்கால குறிப்புகளுக்கு ஹால் டிக்கெட்டைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்
இந்த ஆண்டு கணக்குப்பதிவியல் பாடத்தில் வழங்கப்பட்ட விடை புத்தகங்களை நீக்க சி.பி.எஸ்.இ வாரியம் முடிவு செய்துள்ளது. பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. “2024 வாரியத் தேர்விலிருந்து, பங்குதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ கணக்குப்பதிவியல் பாடத்தில் அட்டவணைகள் வழங்கப்பட்ட விடை புத்தகங்களை நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு தேர்வுகள் முதல், 12 ஆம் வகுப்பில் மற்ற பாடங்களுக்கு வழங்கப்படும் சாதாரண வரிகள் கொண்ட விடை புத்தகங்கள் கணக்குப்பதிவியல் பாடத்திற்கு வழங்கப்படும்” என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எந்தவொரு ஒட்டுமொத்த பிரிவு, வேறுபாடு அல்லது மொத்த மதிப்பெண் பட்டியலை வழங்க வேண்டாம் என்று சி.பி.எஸ்.இ முடிவு செய்துள்ளது. மாணவர்களின் சதவீதத்தை கணக்கிடுவதற்கான அளவுகோல்களை தெரிவிக்க பல விண்ணப்பதாரர்களிடமிருந்து கோரிக்கைகள் வந்த பிறகு வாரியம் அதை அறிவித்தது. வாரியம் மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடவோ அறிவிக்கவோ தெரிவிக்கவோ செய்யாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“