Advertisment

சி.பி.எஸ்.இ வினாத் தாள்கள் கசிவா? வாரியம் மறுப்பு

சி.பி.எஸ்.இ வினாத்தாள் கசிவு என வெளிவரும் தகவல்கள் வதந்தி; மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வாரியம் அறிவுறுத்தல்

author-image
WebDesk
New Update
cbse paper leak news

சி.பி.எஸ்.இ மாணவர்கள் (பிரதிநிதித்துவ படம்)

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் குறித்த வதந்திகள் மற்றும் போலித் தகவல்களுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான ஆண்டு வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ளன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: CBSE Board Exams 2024: Board issues warning against fake information

"தேர்வு நேரத்தில் சில நேர்மையற்ற சக்திகள் யூடியூப், ஃபேஸ்புக், எக்ஸ், டெலிகிராம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வினாத் தாள் கசிவு பற்றிய வதந்திகளைப் பரப்புவதைக் கடந்த சில நாட்களில் கவனிக்க முடிந்தது,” என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மாதிரித் தாள்களில் இருந்து கேள்விகள் இருக்கும் என்று கூறி, மாதிரித் தாள்களின் போலி இணைப்புகளைப் பரப்பி, பணம் செலுத்தினால் கிடைக்கக் கூடிய வினாத்தாளின் அணுகல் தங்களிடம் இருப்பதாகக் கூறி, வினாத்தாள்களின் போலிப் படங்கள்/வீடியோக்களை நேர்மையற்ற சக்திகள் பரப்புகிறார்கள்.

இந்த நபர்கள், குழு மற்றும் ஏஜென்சிகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பணத்தைக் கோருவதன் மூலம் அவர்களை ஏமாற்ற நினைக்கிறார்கள் என்று வாரியம் கூறியது. "ஐ.பி.சி மற்றும் ஐ.டி சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் சமூக ஊடக தளங்களில் போலி செய்திகளைப் பரப்புவதில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட அமலாக்க முகமைகளின் உதவியுடன் சி.பி.எஸ்.இ நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது" என்று சி.பி.எஸ்.இ எச்சரித்தது.

தவறான செய்திகளை பரப்புவதில் ஈடுபட்டால், UNFAIR MeANS விதிகள் மற்றும் IPC இன் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஒரு மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் CBSE கூறியது. இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், வரவிருக்கும் வாரியத் தேர்வுகளை சுமூகமாக நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயலிலும் ஈடுபட வேண்டாம் என்றும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் சி.பி.எஸ்.இ தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbse Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment