சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வுகள் 2024 தேதித்தாள்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 10, 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான தேதி தாளை வெளியிட்டது. தேர்வு அட்டவணை விரைவில் சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in இல் பதிவேற்றப்படும்.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE Board Exams 2024 Datesheet: Class 12th exams from Feb 15-April 2; Class 10th till March 13
அட்டவணைப்படி, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15, 16, 17, 19, 20, 21, 22, 23, 24, 28, 29, மார்ச் 1, 4, 5, 6, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20, 22, 23, 26, 27, 28, 30, ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
பிப்ரவரி 19 இந்தி
பிப்ரவரி 22 ஆங்கிலம்
பிப்ரவரி 27 வேதியியல்
பிப்ரவரி 29 புவியியல்
மார்ச் 4 இயற்பியல்
மார்ச் 9 கணிதம்
மார்ச் 12 உடற்கல்வி
மார்ச் 15 உளவியல்
மார்ச் 18 பொருளாதாரம்
மார்ச் 19 உயிரியல்
மார்ச் 22 அரசியல் அறிவியல்
மார்ச் 23 கணக்கியல்
மார்ச் 27 வணிக ஆய்வுகள்
மார்ச் 28 வரலாறு
ஏப்ரல் 2 தகவல் தொழில்நுட்பம்
10 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15, 16, 17, 19, 20, 21, 23, 24, 26, 28, மார்ச் 2, 4, 5, 7, 11 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்தப்படும்.
பிப்ரவரி 19 சமஸ்கிருதம்
பிப்ரவரி 21 ஹிந்தி
பிப்ரவரி 26 ஆங்கிலம்
மார்ச் 2 அறிவியல்
மார்ச் 4 வீட்டு அறிவியல்
மார்ச் 7 சமூக அறிவியல்
மார்ச் 11 கணிதம்
மார்ச் 13 தகவல் தொழில்நுட்பம்
10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு ஷிப்டுகளாக நடைபெறும், ஒன்று காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், இரண்டாவது காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும் நடத்தப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“