CBSE Board Exams 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பட்டியலை (LOC) சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியை நீட்டித்துள்ளது. இப்போது தாமதக் கட்டணமின்றி மாணவர்கள் பட்டியலைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 5 வரை தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் செலுத்த பள்ளிகளுக்கு தரவு உள்ளீடு இறுதி தேதி மற்றும் நான்கு நாட்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE Board Exams 2024: Deadline to submit LOC for classes 10th, 12th extended to Sept 28
முன்னதாக தாமதக் கட்டணமின்றி மாணவர்கள் பட்டியலை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 18 மற்றும் தாமதக் கட்டணத்துடன் செப்டம்பர் 19 முதல் 25 வரை இருந்தது.
இந்திய மாணவர்களுக்கு, ஐந்து பாடங்களுக்கான தேர்வுக் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.1500 மற்றும் கூடுதல் பாடங்களுக்கு ரூ.300. டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு ஐந்து பாடங்களுக்குக் கட்டணம் ரூ.1200.
நேபாளத்தின் சி.பி.எஸ்.இ வாரியத்தில் படிக்கும் மாணவர்கள் ஐந்து பாடங்களுக்கு ரூ.5000 மற்றும் கூடுதல் பாடங்களுக்கு ரூ.1000 செலுத்த வேண்டும். பிற நாட்டு மாணவர்கள் ஐந்து பாடங்களுக்கு ரூ.10,000 மற்றும் கூடுதல் பாடங்களுக்கு ரூ.2000 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் ஒரு மாணவருக்கு தாமதக் கட்டணம் ரூ.2000. 12 ஆம் வகுப்புக்கு, இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள பள்ளிகளில் ஒரு செய்முறை பாடத்திற்கு கட்டணம் 150 ரூபாய் மற்றும் வெளிநாடுகளில் உள்ள பள்ளிகளில் ஒரு செய்முறை பாடத்திற்கு 350 ரூபாய் நடைமுறைக் கட்டணம். இடம்பெயர்வு சான்றிதழ் கட்டணம் ஒரு மாணவருக்கு ரூ.350.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“