சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், மாணவர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு வினாத்தாள் கடினமாக இருந்தாலும் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
Advertisment
சி.பி.எஸ்.இ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு இந்த ஆண்டு, வினாத்தாள் கடினமாக இருந்தாலும், அதிக மதிப்பெண் கிடைக்கும் என கல்வி ஆலோசகர் அஸ்வின் தனது யூடியூப் வீடியோவில் தெரிவித்துள்ளார். மற்ற மாநிலங்களில் நுழைவுத் தேர்வு அடிப்படையில், பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல், விவசாயம், மீன்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும்.
இதனால் தமிழகத்தில் சி.பி.எஸ்.இ தேர்வு எழுதிய மாணவர்கள் சற்று கவலையில் உள்ளனர். ஏனெனில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் சற்று கடினமாக இருக்கும் என்றும் மாணவர்கள் கூறுகின்றனர். ஆனால் மாணவர்கள் இனி அப்படி கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில் சி.பி.எஸ்.இ நார்மலைஷேசன் (Normalisation) முறையை கொண்டுவந்துள்ளது.
பல ஷிப்ட்களில் தேர்வு நடைபெற்றாலும், அனைத்து தேர்வுகளையும் நார்மலைஷ் செய்யப்படும். எனவே தேர்வு கடினமாக இருந்தாலும் அதிக மதிப்பெண் கிடைக்கும். ஒவ்வொரு ஷிப்ட் தேர்வும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்பட்டு, பின்னர் அனைத்து ஷிப்ட் மதிப்பெண்களும் சமமாக்கப்படும். இதனால் அனைத்து மாணவர்களுக்கும் சம அளவில் மதிப்பெண்கள் கிடைக்கும். இதனால் மாணவர்களின் செயல் திறன் சரியான அளவில் மதிப்பிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“