மாணவர்கள் வாசிக்க, எழுத- டெக்னாலஜியை அறிமுகப்படுத்தும் சிபிஎஸ்இ

வகுப்பறையில் மாறுபட்ட கற்பவர்களைக் கையாளும் திறன் வளர்க்கப்படும்  . மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் அறிவுசார் வளர்ச்சி அதிகரிக்கப்படும்.

21 ஆம் நூற்றாண்டின் மாணவர்களின்  திறன்களை வளப்படுத்துவதற்க்காக  ஆசிரியர்கள் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பாதுகாப்பாகப் பயன்படுத்தவும், பள்ளி அறையினுள் சிபிஎஸ்இ  மூலம்   மேம்படுத்தவும்  புது மாற்றங்களை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)

இதன் ஒரு கட்டமாக , சிபிஎஸ்இ வாரியம் மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து திறன் மேம்பாட்டு கூட்டத்தை நடத்தவிருக்கிறது.  இதன் மூலம்  தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப (ஐ.சி.டி) பற்றிய புரிந்துணர்வு ஆசிரயர்களிடம் ஏற்படுத்துவதுடன், மாணவர்களுக்கு ஒரு புது வித அனுபவத்தையும் , கற்றலில் புது வகையான சாத்தியத்தையும் எட்டலாம் என்று   சிபிஎஸ்இ கருதிகிறது

சிபிஎஸ்இ வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட பள்ளிகளில் தலா இரண்டு ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மொத்தம் 1000 ஆசிரியர்கள் இந்த திறன் மேம்பாடு கூட்டத்தில் கலந்து கொள்ள விருக்கின்றனர்

செப்டம்பேர் 11 முதல் 28 பல்வேறு மாநிலங்களில் பல்வேறு நாட்களில் நடை பெற விருக்கிறது.

திறன் மேம்பாட்டு கூட்டத்தின் நோக்கம்:

மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் 365 இருக்கும் பல சேவைகளை ஆசிரியர்களுக்கு புரிய வைத்தல். உதாரணமாக , செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ), Minecraft  மூலம் கேமிபிகேஷன் (gamification) , டீம்ஸ்(Teams), பிளிப்கிரிட்( Flipgrid), ஒன்நோட்(Onenote ) போன்ற சர்விஸ்களை ஆசிரியர்களுக்கு பழக்கப்படுத்தல்.

கிடைக்கும் நன்மைகள்:

  1. மேகக்கணி சார்ந்த கருவிகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு ஏற்படும்.
  2.  டிஜிட்டல் ஸ்டோரி டெல்லிங் ஆகியவற்றைப் பயன்படுத்தவும், உலகளாவிய கல்வியாளர்களுடன் இணைக்கவும், வகுப்பறை நடவடிக்கைகளைத் திட்டமிடவும் வழி வகுக்கிறது
  3. வகுப்பறையில் மாறுபட்ட கற்பவர்களைக் கையாளும் திறன் வளர்க்கப்படும்  .
  4. மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் அறிவுசார் வளர்ச்சி அதிகரிக்கப்படும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close