Advertisment

மீம்ஸ்களின் மூலம் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க புது முயற்சி : வெல்டன் சிபிஎஸ்இ

CBSE on hilarious meme : சிபிஎஸ்இ நிர்வாகம், மாணவர்களுக்கு மீம்களின் மூலம் தேர்வு பயத்தை போக்கும் புதுவிதமான யுக்தியை கையாள துவங்கியுள்ளது.இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பும் கிடைத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cbse, cbse exam 2020, cbse class 10 exam, cbse hilarious meme, cbse hilarious memes, cbse memes, cbse class 12 exam, cbse.nic.in, cbse board exams 2020, cbse date sheet, cbse passing marks, cbse admit card, cbse 10 12 exam today, education news, indian express, indian express news

cbse, cbse exam 2020, cbse class 10 exam, cbse hilarious meme, cbse hilarious memes, cbse memes, cbse class 12 exam, cbse.nic.in, cbse board exams 2020, cbse date sheet, cbse passing marks, cbse admit card, cbse 10 12 exam today, education news, indian express, indian express news

சிபிஎஸ்இ நிர்வாகம், மாணவர்களுக்கு மீம்களின் மூலம் தேர்வு பயத்தை போக்கும் புதுவிதமான யுக்தியை கையாள துவங்கியுள்ளது.இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பும் கிடைத்துள்ளது.

Advertisment

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்வுநேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு பயத்தை போக்க, சிபிஎஸ்இ நிர்வாகம், கவுன்சிலிங் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கிரியேட்டிவாக சிந்தித்துள்ள சிபிஎஸ்இ, மீம்களின் உதவியுடன் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்கும் நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது.

இந்த கிரியேட்டிவ் ஐடியாவை, சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால், 10 மற்றும் 12ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு துவங்கிய பிப்ரவரி 15ம் தேதி, முதல் மீமை வெளியிட்டு துவக்கிவைத்தார்.

மாணவர்களுக்கு, அவர்களின் மொழியிலேயே சொல்லி, தேர்வு பயம், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் குறித்த விழிப்புணர்வை சொல்ல திட்டமிட்டதன் விளைவே இந்த மீம்கள். தற்போதைய தேர்வுகள் மட்டுமல்லாது, மாணவர்கள் எந்தவிதமான தேர்வுகளையும் எவ்வித பயமும் இல்லாமல் எதிர்கொள்ள இந்த மீம்கள் துணைபுரியும் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எல்லாருக்கும் முன்பாக, பாடத்திட்டத்தை நிறைவு செய்துவிட்டோம் என்று குழந்தை சொல்லுவதுபோல முதல் மீம் வெளியிடப்பட்டுள்ளது.

போர்டு எக்சாம் துவங்கியுள்ளதால், தேர்வுகளில், கண்டிப்பாக நீலநிற பேனாக்கள் பயன்படுத்த வேண்டும். ஜெல் பேனாக்களை பயன்படுத்தக்கூடாது போன்றவை வலியுறுத்தும் வகையிலான மீம்கள் வெளியிடப்பட்டன.

#YoucanDoIt, #beontime, and #theunstoppableyou போன்ற ஹேஷ்டேக்களை டிரென்டிங் ஆக்கும் வகையிலான மீம்கள், சமூகவலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

நீங்கள் சரியான நேரத்திற்கு எந்திரிகாமல் போவதற்கும், படிப்பு மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெறாததற்கும், புவிஈர்ப்பு விசை ஒருபோதும் பொறுப்பேற்க முடியாது என்று விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்வது போன்று ஒரு மீம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சமூகவலைதளங்களில் மீம்கள் பகிர்வு, தற்போதைய தேர்வு நேரத்தில் மட்டுமல்லாது மற்ற நேரங்களிலும் இது தொடரும். மீம்கள், தேர்வு நேரத்திற்கு பிறகு, சிபிஎஸ்இ வாரியத்தின் சமூகவலைதள பக்கங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு பயன்படும் வகையிலான சிறந்த மீம்களை உருவாக்கி தர விளம்பர நிறுவனங்களுடன் சிபிஎஸ்இ இணைந்து செயல்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு (2019)சிபிஎஸ்இ 10 மற்றும் 12 பொதுத்தேர்வை, 31.14 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், இந்தாண்டு (2020) 30,96,771 மாணவர்கள் எழுத உள்ளனர். 10 மற்றும் 12ம்வகுப்பு பொதுத்தேர்வு, பிப்ரவரி 15ம் தேதி துவங்கியுள்ளது. மார்ச் 20ம் தேதி, 10வகுப்பிற்கும், 30ம் தேதி, 12ம் வகுப்பிற்கு தேர்வு நிறைவடைய உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Memes Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment