மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 முதல் 12 வகுப்புகளுக்கான வினாத்தாள் அமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளிகள் இந்த மாற்றங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருவதோடு, அவற்றின் மதிப்பீட்டு முறைகளிலும் மாற்றத்தை செய்து வருகின்றன.
வினாத்தாள் வடிவமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் போட்டித் தேர்வுத் தரங்களுடன் ஒத்துப்போகிறது, இது உயர் படிப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தயாராகும் மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது என கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
இதையும் படியுங்கள்: 12-ம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு; தெரிந்துக் கொள்வது எப்படி?
திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், முந்தைய ஆண்டு 40% உடன் ஒப்பிடும்போது, 50% திறன் அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டிருக்கும். மீதமுள்ள 30% குறுகிய மற்றும் நீண்ட பதில்கள் உட்பட கட்டமைக்கப்பட்ட பதில் கேள்விகளைக் கொண்டிருக்கும், மீதமுள்ள 20% கொள்குறி வகை கேள்விகளாக (MCQs) இருக்கும்.
“தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020க்கு இணங்க, கருத்தியல் அடிப்படையிலான கற்றல் மற்றும் திறன் அடிப்படையிலான கற்றல் நோக்கிய மாற்றம் CBSEயின் புதிய வினாத்தாள் வடிவத்தில் தெளிவாகத் தெரிகிறது. கருத்தியல் வகை கேள்விகளை ஊக்குவிப்பதன் மூலம், வாரியமானது கற்றலை ஊக்கப்படுத்துவதையும், கருத்துகளின் ஆழமான புரிதலை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அணுகுமுறை தேர்வுகளின் போது மாணவர்களுக்கு பயனளிப்பதோடு, மதிப்பீட்டு செயல்முறையையும் விரைவுபடுத்தும். இருப்பினும், கருத்தியல் வகை வினாக்களுக்கான இந்த மாற்றத்திற்கு ஆசிரியர்கள் மாணவர்களை வித்தியாசமாக தயார்படுத்த வேண்டும்," என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil