Advertisment

நாங்கள் சொல்லிய பாடத் திட்டங்களை படித்தால் போதும் - மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பதில்

இந்த அறிக்கை , சில சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் இருந்த சில குழப்பங்களை தீர்ப்பதாய் அமைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Class 10th, 12th exams to be held as per CBSE syllabus, not NCERT books

Class 10th, 12th exams to be held as per CBSE syllabus, not NCERT books

Class 10th, 12th exams to be held as per CBSE syllabus :  202oல் நடக்கவிருக்கும் சிபிஎஸ்இ வாரியத் தேர்வு தொடர்பான முக்கிய அறவிப்பு ஒன்றை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. அதில், வாரியத் தேர்வுக்கு சிபிஎஸ்இ அதிகாரபூர்வமாக சொல்லியிருக்கும்  பாடத்திட்டங்களை மட்டும் மாணவர்கள் பின்பற்றினால் போதும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் இருந்த சில குழப்பங்களை தீர்ப்பதாய் அமைந்துள்ளது.

Advertisment

எதனால் குழப்பம்? 

சில நாட்களுக்கு முன்பு, சிபிஎஸ்இ வாரியத் தேர்வெழுதும் மாணவர்கள் என்.சிஇ.ஆர்.டி வெளியிடும் புத்தங்களை படிக்க சிபிஎஸ்இ பரிந்துரைத்தது. என்.சிஇ.ஆர்.டி என்பது இந்திய நாட்டின் கல்வித் தரங்களை உயர்த்துவதற்காக சட்டத்தால்  உருவாக்கப்பட்ட கல்வி அமைப்பு. இது வெளியிடும் புத்தகங்கள் இந்தியாவில் மிகவும் பிரபலமானவை . ஐ.ஏ.எஸ் , நீட் தேர்வு எழுதுபவர்களும் இந்த புத்தகத்தை படிப்பது வழக்கம். அதனால் இந்த என்.சிஇ.ஆர்.டி 9,10,11,12 ம் புத்தகத்தில் இருக்கும் சில நுணுக்கமான பகுதிகளை,   மாணவர்களை பரிசோதிப்பதற்காகவோ, தேர்வுக்காக  இல்லை என்று தெளிவாக சுட்டப்பட்டிருக்கும். இதனால், இந்த குறிப்பிட்ட பகுதியை  படிக்கனுமா ?  அல்லது வேண்டாமா? என்ற கேள்வியும் சிபிஎஸ்இ மாணவர்கள் மத்தியில் வந்த வண்ணமே இருந்தது.

 

 

இந்த குழப்பத்தைத் தான் தற்போது தீர்த்துள்ளது  சிபிஎஸ்இ.  cbseacademic.nic.in/curriculum.html என்ற இணைய முகவரியில் வகுப்பு 9,10,11,12 பாடத் திட்டங்கள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உள்ளவைகளை மட்டும் மாணவர்கள் 2020 ல் நடக்கும் தேர்வுக்கு மணாவர்கள் தயாரானால் போதும் என்று தற்போது சிபிஎஸ்இ சொல்லியுள்ளது.

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment