/tamil-ie/media/media_files/uploads/2022/04/CBSE-exams-1.jpg)
CBSE Class 10 Results 2022 postponed: சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடூ ஒத்திவைக்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று (ஜூலை 4) வெளியிட திட்டமிட்டது. ஆனால், சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு முடிவுகளை வாரியம் ஜூலை 4 ஆம் தேதி வெளியிடாது என்று சி.பி.எஸ்.இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பான தகவல்கள் உரிய நேரத்தில் cbseresults.nic.in, cbse.gov.in, ஆகியவற்றில் பகிரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக லட்சக்கணக்கான மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், முடிவுகள் வெளியிடப்படாது என தெரிய வந்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தநிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 10 அல்லது ஜூலை 13 ஆம் தேதி சி.பி.எஸ்.இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.