CBSE Board Exams Date Sheet 2020 : 10, 12 சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை எப்போது ?
CBSE Date Sheet In January: சிபிஎஸ்இ 10,12 வாரியத் தேர்வு அட்டவணை ஜனவரி மாதத்திற்கு முன்பு வெளியிட மாட்டோம் என்று வாரியத் தலைவர் அனிதா கார்வால் தெரிவித்துள்ளார்.
CBSE Class 10, 12 Board Exam Schedule : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10, 12 வகுப்புகளுக்கான வாரியத் தேர்வு அட்டவணை ஜனவரி மாதம் வெளியிட உள்ளது . சிபிஎஸ்இ தேர்வு அட்டவணையை டிசம்பரில் வெளியிடப்படும் என்று சில ஊடக அறிக்கைகள் தெரிவித்திருந்தன. வாரியத் தலைவர் அனிதா கார்வால் இது குறித்து தெரிவிக்கையில், ஜனவரி மாதத்திற்கு முன்பு தேர்வு அட்டவணையை வெளியிட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
Advertisment
மேலும், "இந்த தேர்தல் அட்டவணையை cbse.nic.in என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிபிஎஸ்இ வகுப்பு 10, 12 தேர்வுகள் பிப்ரவரி முதல் தொடங்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
சிபிஎஸ்இ சில நாட்களுக்கு முன்பு 10,12 வகுப்புகளுக்கான நடைமுறைத் தேர்வு அட்டவனையை வெளியிட்டிருந்தது. அதிகாபூர்வ அறிவிப்பின் படி, 2020ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிப்ரவரி 7ம் தேதி வரை இந்த வகுப்புகளுக்கான நடைமுறைத் தேர்வு நடக்கவிருக்கிறது.
மேலும், 10, 12 வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண்களிலும் மாற்றம் செய்திருந்தது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, தியரி பேப்பர், நடைமுறைத் தேர்வு , உள் மதிப்பீடு போன்ற ஒவ்வொரு படத்தில் இருக்கும் அனைத்து பிரிவுகளிலும் 33 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
என்.சி. இ.ஆர்.டி புத்தகங்களில் இருக்கும் சில பகுதிகள், சிபிஎஸ்இ வாரியம் சொல்லப்பட்ட பாடத்திட்டங்களில் இல்லையென்பதால் அதை மாணவர்கள் தேர்வுக்கு படிக்க வேண்டாம் என்றும் சில நாட்களுக்கு முன்பு அறிக்கை விடுத்திருந்தது