/tamil-ie/media/media_files/uploads/2017/05/cbse-results-759.jpg)
cbse.nic.in,
CBSE 10th, 12th Admit Card: நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளது. மாணவர்கள் இதை cbse.nic.in, மற்றும் cbseonline.in, சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ கடந்த வருடம் அதிகாரப்பூர்வமாக இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
CBSE Released Admit Card for Class 10th and 12th @ cbseonline.in: ஹால் டிக்கெட்!
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டுத் தேர்வுகள் பிப்ரவரி 2-வது வாரத்தில் தொடங்குகிறது.
நாடு முழுவதும் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு இந்த தேர்வுகளை முன் கூட்டியே தொடங்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி முடிகிறது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கி மார்ச் 29-ம் தேதி முடிகின்றன. சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் அனைத்தும் காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டி cbse.nic.in, மற்றும் cbseonline.in, சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.