CBSE 10th Results updates: இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்புத் தேர்வுகளை, கிட்டத்தட்ட 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தத் தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. தேர்வுக்கான கால அளவு மூன்று மணி நேரம். அதாவது காலை 10:30 மணி மற்றும் மதியம் 1:30 மணிக்கு முடிவடையும்.
சி.பி.எஸ்.இ வாரியம் இன்னும் ரிசல்ட் அறிவிப்பு தேதியை அறிவிக்கவில்லை என்றாலும், அது விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சரிபார்க்கலாம். அவை www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in
இதையும் படியுங்கள்: NEET Exam 2023 Analysis: இயற்பியல், வேதியியல் கேள்விகள் கடினம்; நீட் தேர்வுக்கு தமிழக மாணவர்கள் ரியாக்ஷன்
2018 ஆம் ஆண்டில், 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 5 முதல் ஏப்ரல் 14 வரை நடத்தப்பட்டன, ஆனால் முடிவுகள் 44 நாட்களுக்குப் பிறகு மே 29 அன்று அறிவிக்கப்பட்டன.
அடுத்த ஆண்டு, 2019ல், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான காத்திருப்பு நேரம் குறைந்தது. சி.பி.எஸ்.இ தேர்வுகள் பிப்ரவரி 21 முதல் மார்ச் 29 வரை நடத்தப்பட்டன, மேலும் 37 நாட்கள் காத்திருப்பு காலத்திற்குப் பிறகு மே 6 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட்டது, இது முந்தைய ஆண்டை விட ஒரு வாரம் குறைவாக இருந்தது.
2020 ஆம் ஆண்டில் கோவிட் உலகைத் தாக்கியபோது, கோவிட் – 19 காரணமாக தேர்வுகளைத் தொடர வேண்டாம் என்று வாரியம் முடிவு செய்த பின்னர், ஜூலை 15 ஆம் தேதி சி.பி.எஸ்.இ முடிவு அறிவிக்கப்பட்டது, மேலும் உள் மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முடிவு தயாரிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டிலும், தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன, ஆனால் முதல் கோவிட் – 19 ஆண்டுடன் ஒப்பிடும்போது ரிசல்ட் மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்டது. முந்தைய ஆண்டு ஜூலை 15 ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது, அந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டில், தேர்வு வாரியம் இரண்டு பருவங்களில் தேர்வுகளை நடத்த முடிவு செய்த பின்னர் ஜூலை மாதம் முடிவு அறிவிக்கப்பட்டது. நவம்பர் – டிசம்பர் மற்றும் மே – ஜூன் 2023 என இரண்டு பருவமாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
கோவிட் – 19 க்கு முந்தைய ஆண்டுகளில், மே மாதத்திலேயே முடிவு அறிவிக்கப்பட்டது, அதே சமயம் கோவிட் – 19 தொற்றுநோய்க்குப் பிறகு, ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முடிவு அறிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil