CBSE Class 12th Maths Exam 2025: இன்று (மார்ச் 8) சி.பி.எஸ்.இ-ன் கணிதம் மற்றும் பயன்பாட்டுக் கணிதத் தேர்வுகள் நடத்தப்பட்டன. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இந்த தேர்வுகள் நடைபெற்றன.
Advertisment
கல்வி துறை வட்டாரத்தின் தகவல்கள் படி, இந்த தேர்வுகள் மிக எளிதாகவும், மிக கடினமாகவும் அல்லாமல் ஆவரேஜ் நிலையில் இருந்ததாக தெரிய வருகிறது. இதில் கேள்விகள் அனைத்தும் சமநிலையான வகையில் அடங்கி இருந்தன. இதில் ஒரு மார்க் கேள்விகள் பெரும்பாலும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
எனவே, அந்த பாடத்திட்டத்தை முழுமையாக படித்திருந்த மாணவர்கள் ஓரளவிற்கு இதனை சிறப்பாக எழுத முடியும். எனினும், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சவால் அளிக்கும் விதமாக சில கடினமாக கேள்விகளும் இடம்பெற்றிந்தன.
கல்வியாளர்கள் மூலமாக சி.பி.எஸ்.இ கணிதத் தேர்வின் முழுமையான பகுப்பாய்வு இங்கே அப்டேட் செய்யப்படும்.