Advertisment

CBSE Class 12 Exam 2020 : 12ம் வகுப்பு தேர்வுகளை எளிமைப்படுத்தும் முயற்சியில் சி.பி.எஸ்.இ... அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றங்கள்!

CBSE Class 12 Exam Pattern Change : தேர்வுதாள்களை திருத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும் புதிய மாற்றங்கள் அறிமுகம்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE Class 12 Exam patterns, CBSE Class 12 New Exam patterns, CBSE Class 12 Exam 2020, CBSE 12th Exam Pattern Change

CBSE

CBSE Introduces Changes in Class 12 Exam Pattern : சி.பி.எஸ்.இ. தேர்வு முறைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் வெறுமனே அனைத்தையும் மனப்பாடம் செய்து எழுதும் பழக்கத்தை மாற்றவும், புரிந்து உணர்ந்து பாடங்களை படிக்கும் வகையில் தேர்வு முறைகள் மாற்றம் செய்யப்பட இருப்பதாக சி.பி.எஸ்.சி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

Advertisment

CBSE Class 12 Exam patterns : அறிவிப்பின் படி ஏற்பட இருக்கும் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இனி வரும் காலங்களில் விரிவாக்கங்களுக்கு பதிலாக சரியானவற்றை தேர்வு செய்யும் முறைகளில் கேள்வி தாள்கள் அமைக்கப்படும்.

அனலடிக்ஸ், ரீசனிங் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கொடுக்கப்படும்.

2020ம் ஆண்டு முதல், 20% மதிப்பெண்கள் இண்டெர்நெல் தேர்வுகளுக்கு வழங்கப்படும். அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளில் மாற்றம் ஏதும் இருக்காது.

10 மற்றும் 12 வகுப்புகளில் நடைபெறும் நடைமுறை தேர்வுகளை அடுத்த ஆண்டு முதல் வெளி தேர்வு மையங்களில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே நடைமுறை தேர்வுகளை எழுதுகின்றனர். எழுத்து தேர்வுகளைப் போல் அடுத்த ஆண்டு முதல் நடைமுறை தேர்வுகளும் இதர பள்ளிகளின் தேர்வு மையங்களில் நடத்தப்படும்.

தேர்வுதாள்களை திருத்தும் பணியில் இருக்கும் ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும், தவறுகள் ஏதும் இல்லாமல் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் 25 விடைத்தாள்கள் திருத்தத்திற்கு பதிலாக 20 விடைத்தாள்கள் மட்டும் திருத்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நீட் தேர்வுக்கு எதிராக சூர்யா மீண்டும் அறிக்கை: ‘கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்’

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment