CBSE 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள்: இந்த ஆண்டு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். தற்போது வரை, ரிசல்ட் அறிவிப்பிற்கான எந்த தேதியையும் சி.பி.எஸ்.இ அறிவிக்கவில்லை.
ரிசல்ட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் தங்கள் முடிவுகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம் – www.cbse.nic.in, www.cbseresults.nic.in, www.cbseresults.gov.in மற்றும் www.cbse.gov.in
இதையும் படியுங்கள்: CBSE Class 10 Results: மாணவிகள் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் உயர்வு; ரிசல்ட் செக் செய்வது எப்படி?
இம்முறை, சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. தேர்வுகள் காலை 10:30 மணிக்கு தொடங்கி மதியம் 1:30 மணி வரை மூன்று மணி நேரம் நடந்தது.
கடந்த சில ஆண்டுகளில், CBSE 12 ஆம் வகுப்பு முடிவுகளை அறிவிக்க கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது. இருப்பினும், இது குறிப்பாக கோவிட்க்கு முந்தைய காலக் கட்டமாகும். 2018 இல், மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன, மேலும் 43 நாட்களுக்குப் பிறகு மே 26 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
பின்னர், 2019 இல் ரிசல்ட் வெளியிடும் கால அளவில் வியத்தகு குறைவு ஏற்பட்டது. முந்தைய ஆண்டில் 43 நாட்கள் காத்திருப்பு காலத்துடன் ஒப்பிடுகையில், 2019 இல் 28 நாட்கள் என்ற மிக குறைவான காலக்கட்டத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது. தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதி முடிவடைந்தது, அதற்கான ரிசல்ட் மே 2-ம் தேதி வெளியிடப்பட்டன.
2020 ஆம் ஆண்டில், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் பின்னர் ரத்து செய்யப்பட்டன. கோவிட் ஆண்டில், ஜூலை 13 அன்று முடிவு அறிவிக்கப்பட்டது. பல்வேறு மாநில அரசுகளின் கோரிக்கைகள் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக சி.பி.எஸ்.இ கூறியது. தேர்வுகளை ரத்து செய்யும் முடிவு உச்ச நீதிமன்ற விசாரணையில் முதலில் வெளிப்பட்டது. எனவே, உள் மதிப்பீட்டுத் திட்டத்தின் அடிப்படையில் முடிவு தயாரிக்கப்பட்டது.
கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021 இல் தேர்வுகள் மீண்டும் ரத்து செய்யப்பட்டன. ஜூலை 30 அன்று முடிவு அறிவிக்கப்பட்டது. 2020 மற்றும் 2021 க்கு இடையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பில் 17 நாட்கள் வித்தியாசம் இருந்தது. 2021 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு முடிவுகளைத் தயாரிப்பதற்காக வாரியத்தால் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டில், தேர்வுகள் இரண்டு தவணைகளாக நடத்தப்பட்டன, முதல் பருவம் நவம்பர் - டிசம்பர் மற்றும் இரண்டாம் பருவம் மே - ஜூன் 2023 இல் நடைபெற்றது. 2019 மற்றும் 2018 இன் கோவிட்க்கு முந்தைய காலக்கட்ட தேர்வு முடிவுகள் வெளியிடும் காலக்கட்டத்தை விட 2 நாட்கள் குறைவாக ஜூலை 26 அன்று 41 நாட்களுக்குப் பிறகு முடிவுகளை சி.பி.எஸ்.இ அறிவித்தது.
கடந்த ஆண்டு, இரண்டு முறை தேர்வுகள் நடத்தப்பட்டன. முதல் பருவத் தேர்வுகள் நவம்பர்-டிசம்பரிலும், இரண்டாம் பருவத் தேர்வு மே-ஜூனிலும் நடத்தப்பட்டன. 2022 ஆம் ஆண்டில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக இருந்தது மற்றும் 14,44,341 மாணவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil