Advertisment

CBSE Exams: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு கணிதத் தேர்வு ஆவரேஜ்; மாணவர்கள் – ஆசிரியர்கள் கருத்து

CBSE Exams: சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு ஆவரேஜ் அளவில் இருந்தது; விளக்கங்களைக் கூறும் மாணவர்கள் – ஆசிரியர்கள்

author-image
WebDesk
New Update
cbse exam maths

CBSE Exams: சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு கணிதத் தேர்வு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 12 ஆம் வகுப்பு கணிதத் தாளை நடத்தியது. கணித் தாள் புரிந்துகொள்வதற்கு எளிதாகவும், சி.பி.எஸ்.இ மாதிரித் தாள்களுடன் நன்றாகச் சீரமைக்கப்பட்டதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். CBSE 2024 கணிதம் வகுப்பு 12 கேள்விகளின் சிரம நிலை மிதமானது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: CBSE Class 12th Exam Maths Analysis: ‘Challenging assertion-reasoning questions’

இன்று கணிதத் தாளில் உள்ள கூற்று- காரணம் வகை கேள்விகள் ஒரு தனித்துவமான சவாலை முன்வைத்தது, என்று கூறிய வித்யாஞானப் பள்ளியின் கணிதத்தின் ஒருங்கிணைப்பாளர் சத்ய தேவ் பச்சௌரி, மாணவர்கள் தகுந்த காரணத்துடன் கூற்றை இணைக்க கோருவதாக வினாக்கள் இருந்தது என்றும் கூறினார்.

ஷோப்நாத் பால், பில்லாபோங் உயர் சர்வதேசப் பள்ளி, மலாட் கருத்துப்படி, கணிதத் தாள் மிதமானதாக இருந்தது. இருப்பினும், D மற்றும் E பிரிவுகள் மாணவர்களுக்கு கொஞ்சம் சவாலாக இருந்தன, என்று கூறினார்.

மாடர்ன் பப்ளிக் பள்ளியில் படித்த மாணவர் பிரதீக் தோமர், கணிதத் தாளை சற்று எளிதாக இருந்ததாகக் கூறினார். பல தேர்வு கேள்விகள் விடையளிக்கக் கூடியதாக இருந்தாலும், பெரும்பாலான கேள்விகள் வழக்கமான கேள்விகள், மிகவும் கடினமாக இல்லை. ஒட்டுமொத்தமாக, தேர்வு நன்றாக இருந்தது, என்று அந்த மாணவர் கூறினார்.

'மிதமானது மற்றும் நீளமானது'

ஷிவ் நாடார் பள்ளி நொய்டாவின் மூத்த கல்வியாளர் தீபிகா ஜோஷி மற்றும் பர்மீத் சிங் கருத்துப்படி, கணிதத் தாள் மிதமாகவும் நீளமாகவும் இருந்தது, ஏ மற்றும் சி பிரிவுகளில் சில கடினமான கேள்விகளுடன் இருந்தது.

மாடர்ன் பப்ளிக் பள்ளியின் முதல்வர் அல்கா கபூரின் கூற்றுப்படி, சி.பி.எஸ்.இ கணிதத் தாளில் மிதமான சிரம நிலையில் நன்கு வடிவமைக்கப்பட்ட கணக்கீடுகள் இருந்தன.

"ஒட்டுமொத்தமாக தேர்வு நன்றாக இருப்பதாக நான் கருதினாலும், மாணவர்கள் சில பகுதிகளில் சவால்களை சந்திக்க நேரிடலாம், குறிப்பாக பிரிவு A மற்றும் மாக்சிமா மற்றும் மினிமா கேஸ் ஸ்டடியில் கடினமான பல தேர்வு கேள்விகள் இருந்தன. இருப்பினும், பிரிவு D மிகவும் எளிமையானதாக மாறியது. ஆசிரியர்களைப் பொறுத்த வரையில், வெற்றி மற்றும் வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் சிரமத்திற்கும் வாய்ப்புக்கும் இடையே நல்ல சமநிலையை கணிதத் தாள் வழங்கியது,” என்று முதல்வர் அல்கா கபூர் கூறினார்.

காஜியாபாத்தில் உள்ள சில்வர்லைன் பிரெஸ்டீஜ் பள்ளியின் கணிதப்பிரிவு HOD, விகாஸ் குமார் குப்தாவின் கூற்றுப்படி, 12 ஆம் வகுப்பு கணிதத் தாள் CBSE மாதிரித் தாள்களுடன் நன்றாகச் சீரமைக்கப்பட்டது.

"தாள்களில் பொருத்தமான தேர்வுகளை வழங்குவது மாணவர்களின் திருப்திக்கு மேலும் பங்களித்தது, இது ஒரு வெற்றிகரமான தேர்வை பிரதிபலிக்கிறது," என்று விகாஸ் குமார் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cbse Exams
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment