9-12 வகுப்புக்கு 30% பாடத்திட்டம் குறைப்பு; இரண்டு கட்டங்களாக தேர்வு; சிபிஎஸ்இ அறிவிப்பு

CBSE releases rationalised term-wise syllabus for Class 9-12: கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ தற்போது 9 முதல் 12 வகுப்புகளுக்கு 30% அளவிற்கு பாடங்களை குறைத்துள்ளது

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சனிக்கிழமை 9 முதல் 12 வகுப்பிற்கான திருத்தப்பட்ட கால (Term-wise) வாரியான பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த கல்வி அமர்வில் இருந்து டேர்ம் வாரியான பாடத்திட்டம் அமலாகிறது. அனைத்து பாடங்களுக்கான விரிவான பாடத்திட்டம் சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது.

பாடத்திட்ட விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் – http://cbseacademic.nic.in/.

கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, சிபிஎஸ்இ தற்போது 9 முதல் 12 வகுப்புகளுக்கு 30% அளவிற்கு பாடங்களை குறைத்துள்ளது.

2021-2022 கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வகுப்பு வாரியத் தேர்வுகளுக்கான புதிய திட்டத்தை சிபிஎஸ்இ வாரியம் முன்பு அறிவித்துள்ளது. ஆண்டின் இறுதியில் ஒரு போர்டு தேர்வுக்கு பதிலாக, கல்வி அமர்வு இரண்டு டேர்ம்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு டேர்ம் முடிவிலும் சிபிஎஸ்இ வாரியம் முடிவிலும் தேர்வுகளை நடத்தவுள்ளது.

பாடநெறி உள்ளடக்கம் தவிர, இந்த பாடத்திட்டம், இரண்டு வாரிய தேர்வுக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்களை மதிப்பீடு செய்வதற்கான அளவுகோல்களைக் குறிப்பிடுகிறது.

முதற்கட்ட டேர்ம் தேர்வுகள் நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற உள்ளது. இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடிப்படையில் நடக்கும். மேலும் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முதல் பாதியை மட்டுமே உள்ளடக்கி தேர்வில் கேள்விகள்  இருக்கும். இந்த தேர்வுகளுக்கான கால அளவு 90 நிமிடங்களாக இருக்கும். சிபிஎஸ்இ வினாத்தாள்கள் மற்றும் குறிக்கும் திட்டங்களை பள்ளிகளுக்கு அனுப்பும். பள்ளிகள் வெளி தேர்வாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் மேற்பார்வையில் தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வாரியத்திற்கு அனுப்பும்.

இரண்டாம் கட்ட டேர்ம் தேர்வுகள் 2022 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் வாரியம் நிர்ணயித்த தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ளன. இந்தத் தேர்வுகள் வெவ்வேறு வடிவங்களில் கேள்விகளைக் கொண்ட இரண்டு மணிநேர தேர்வுகளாக இருக்கும், ஆனால் “சாதாரண எழுத்துத் தேர்வுகளுக்கு நிலைமை உகந்ததாக இல்லாவிட்டால்”, இரண்டாம் கால தேர்வுகளும் 90 நிமிட MCQ வினாக்களின் வடிவத்தில் இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbse class 9 12 syllabus releases rationalised term wise syllabus for class 9 12 cbseacademic nic in

Next Story
TNSTC வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு தகுதி; ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express