இன்று நடக்கும் சிபிஎஸ்சி 10/12 வாரியத் தேர்வுக்கு இந்தியாவில் 30,96,771 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு பதிவை விட குறைவாகும். கடந்த ஆண்டு தேர்வில் 31.14 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Advertisment
10 ஆம் வகுப்பில் 7,88,195 மாணவிகள் , 11,01,664 மாணவர்கள் மற்றும் 19 திருநங்கைகள் தேர்வு எழுதினர். 12 ஆம் வகுப்பில் 5,22,819 மாணவிகள், 6,84,068 மாணவர்கள் மற்றும் ஆறு திருநங்கைகள் தேர்வு எழுதினர்.
இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்புக்கு 18,89,878 தேர்வர்களும் ,12 ஆம் வகுப்பில் 12,06,893 தேர்வர்களும் தேர்வுகளை எழுத உள்ளனர்.
10-ஆம் வகுப்பில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட 6,844 மாணவர்களும், 12- ஆம் வகுப்பில் 3,718 சிறப்புத் தேவைகள் கொண்ட மாணவர்களுக்கும் கலந்து கொண்டார்.
10 ஆம் வகுப்புக்கு 5376 தேர்வு மையங்களும் 12 ஆம் வகுப்புக்கு 4,983 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி வாரியம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 10 ஆம் வகுப்புக்கான பள்ளிகளின் எண்ணிக்கை 20,398 ஆகும், 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகளின் எண்ணிக்கை 13,119 ஆகும்.
மாணவர்கள் தேர்வு நாட்களில் காலை 9:45 அல்லது அதற்கு முன்னதாக தேர்வு மையத்தை அடைவது நல்லது. தகுதியான அட்மிட் கார்டு கொண்டு செல்ல வேண்டும். காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் வரும் மாணவரகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.