CBSE CTET 2021: சிபிஎஸ்இ 2021 கல்வியாண்டிற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை ஜனவரி 31 ஆம் தேதி நாடு முழுவதும் தேர்வு மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். இரண்டு நிலைகளிலும் பாடம் நடத்த விரும்புவோர் இரு தாள்களும் எழுத வேண்டும்.
தேர்வுக்கு தயாராவது எப்படி?
குழந்தைகள் வளர்ச்சி போன்ற தலைப்புகளில் விண்ணப்பதாரகளின் அடிப்படை புரிதல்களை சிபிஎஸ்இ சோதிக்கும் என்பதை முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம். எனவே, குழந்தைகள் வளர்ச்சி, கற்பித்தல் முறைகள், கணிதம் / அறிவியல் / சுற்றுச்சூழல் அறிவியல் போன்ற பிற தலைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்துவது இன்றியமையாகிறது.
தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாணவர்கள் மாக் டெஸ்ட் சோதனையில் தங்களை உட்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.
இரண்டு தாள்களிலும், தேர்வர்கள் 150 நிமிடங்களுக்குள் 150 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும். எனவே, மாக் டெஸ்டின் போது, நேர மேலாண்மை குறித்த புரிதலை ஒருவர் பெற வேண்டும். சோர்வாகாமல், அதிகப்படியான மாக் டெஸ்ட் சோதனைகளை முயற்சித்தால் தான் தகுதித் தேர்வ இறுதி பட்டியலில் இடம்பெற முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
மீதமிருக்கும் கடைசி சில நாட்களில், ஒரு குறிப்பிட்ட பாடப்பகுதியை ஆய்வு செய்ய முயற்சிப்பதற்கு பதிலாக, தேர்வர்கள் ஸ்மார்ட் உத்திகளைக் கடைபிடிக்க வேண்டும். அவை நேரம் ஒரு தடையாக இருக்கும்போது பயனுள்ளதாக இருக்கும். அண்மையில் முடிவுற்ற ஆசிரியர் தகுதி தேர்வுகளின் வினா மற்றும் விடைகளை ஒருவருக்கு பெரிதும் உதவக்கூடும்.
பாடநூல்கள், வழிகாட்டி புத்தகங்கள், வினா வங்கிகள் போன்றவற்றை அடிக்கடி புரட்டி பார்ப்பது மிகவும் நல்லது. இது நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, இருக்கும் நேரத்தை நல்ல முறையில் செலவிட வாய்ப்பளிக்கிறது
தேர்வர்கள் பியர்சன் மற்றும் அரிஹந்த் வெளியீடு புத்தகங்களையும் பின்பற்றலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil