விரைவில் வெளியாகிறது CTET தேர்வு விடைக்குறிப்பு - தேர்வர்களே கவனம்
CTET answer key 2019 : CTET தேர்வின் விடைக்குறிப்புகள் ( answer key) விரைவில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் (Central Board of Secondary Education (CBSE)) நடத்தப்பட்ட CTET தேர்வின் விடைக்குறிப்புகள் ( answer key) விரைவில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
CTET தேர்வு, OMR விடைத்தாள் முறையில் நடத்தப்பட்டுள்ளதால், விடைக்குறிப்புடன் இந்த OMR விடைத்தாளும் தேர்வர்கள் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக, தேர்வர்கள், Secretary, Central Board of Secondary Education என்ற பெயரில், டில்லியில் செல்லத்தக்க வகையில் ரூ.500 டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடித்த தமிழக இஞ்ஜினியர்
CTET தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்பட்டது. முதல் தாள், 1 முதல் 5ம் வகுப்பு வரையும், இரண்டாம் தாள் 6 முதல் 8ம் வகுப்புக்குமாக நடத்தப்பட்டது. 150 மதிப்பிலான இந்த தேர்வுக்கு தேர்வர்கள் 150 கேள்விகளுக்கு விடையளித்திருந்தனர்.
CTET ( மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு) சான்றிதழ், 7 ஆண்டுகள் காலஅளவு கொண்டது ஆகும். இந்த தேர்வு சான்றிதழை பெற எத்தனை முறை வேண்டுமானாலும் இத்தேர்வினை எழுதலாம். அதேபோன்று, ஒரு முறை தேர்ச்சி பெற்றவர், அதிக மதிப்பெண்களை பெற மீண்டும் இந்த தேர்வை எழுதலாம் என்பது குறிப்பிடத்தக்கது.