சீனாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதம் நாட்டின் ஒரு குழந்தைக் கொள்கையைப் பற்றி என்ன கூறுகிறது?

2015 ஆம் ஆண்டில், சீனா இந்தக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அனைத்து குடும்பங்களும் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதித்தது

சீனாவில் பிறப்பு விகிதம் 70 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் குறைந்துள்ளது. சீனாவின் தேசிய புள்ளிவிவர பணியகத்தின் படி, 2019 ஆம் ஆண்டில் பிறப்பு விகிதம் 1,000 க்கு 10.48 ஆக இருந்தது, இது 1949 க்குப் பிறகு மிகக் குறைவானதாகும். 2019 இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 580,000 க்கும் குறைந்து 14.65 மில்லியனாக இருந்தது. இந்த பிறப்பு வீத வீழ்ச்சிக்கு பெரும்பாலும் சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை காரணமாக இருக்கலாம். இந்த கொள்கை 1979 ஆம் ஆண்டில் அப்போதைய தலைவர் டெங் சியாவோபிங்கின் கீழ் நடைமுறைக்கு வந்தது.

இலங்கை குடியுரிமை குறித்து நீங்கள் அறிந்ததும் அறியாததும்!

சீனாவின் ஒரு குழந்தை கொள்கை

அந்த நேரத்தில் ஒரு பில்லியனை நெருங்கிக்கொண்டிருந்த சீனாவின் மக்கள் தொகை பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்ற கவலையினால் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. நகர்ப்புறங்களில் மிகவும் திறம்பட செயல்படுத்தப்பட்ட இந்தக் கொள்கை, ஒரு குழந்தையைப் பெறுவதற்கு குடும்பங்களை நிதி ரீதியாக ஊக்குவித்தல், கருத்தடைகளை பரவலாகக் கிடைக்கச் செய்தல் மற்றும் கொள்கையை மீறியவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தல் உள்ளிட்ட பல வழிகளில் செயல்படுத்தப்பட்டது.

1980 களின் முற்பகுதியில், கட்டாய கருக்கலைப்பு மற்றும் ஸ்டெர்லைசேஷன்களையும் அரசு பயன்படுத்தியது. இந்தக் கொள்கை சர்ச்சைக்குரியதாக இருந்ததால் விமர்சிக்கப்பட்டது. ஏனெனில் இது மனித உரிமை மீறல் என்றும் ஏழை சீனர்களுக்கு நியாயமற்றது என்றும் கருதப்பட்டது. ஏனெனில் பணக்காரர்கள் இந்த கொள்கையை மீறினால் அபராதம் விதித்தால் கூட அவர்களால் செலுத்த முடியும். கொள்கையின் காரணமாக, பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்தாலும், பாலின விகிதம் ஆண்கள் பக்கம் திசைதிருப்பப்பட்டது. நாட்டில் பாரம்பரியமாக ஆண் குழந்தைகள் மீது அதிக விருப்பம் இருந்ததால் இது நிகழ்ந்தது. இதன் காரணமாக பெண் கருக்கலைப்பு அதிகரித்தது, அனாதை இல்லங்களில் வைக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

2015 ஆம் ஆண்டில், சீனா இந்தக் கொள்கையை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்து அனைத்து குடும்பங்களும் இரண்டு குழந்தைகளைப் பெற அனுமதித்தது.

சீனா போன்ற பொருளாதாரத்தின் பிறப்பு வீதத்தின் முக்கியத்துவம் என்ன?

டெலோயிட் இன்சைட்ஸ் அறிக்கையின்படி, சீனாவின் ஒரு குழந்தைக் கொள்கை இனி நடைமுறையில் இல்லை என்றாலும், அதன் விளைவுகள் இன்னும் உணரப்படுகின்றன. சீன மக்கள் தொகையின் மூப்படைதல் மற்ற இடங்களை விட வேகமாக அதிகரித்துவிட்டது. இது நாட்டின் வளர்ச்சித் திறனைக் குறைக்கும் என்று அறிக்கை கூறுகிறது.

அடிப்படையில், இதன் பொருள் சீனா அதன் பொருளாதார வளர்ச்சியின் முழு பலன்களையும் அறுவடை செய்யாது, அதை ஆதரிக்க வேறு வழிகள் தேவைப்படும். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற சில ஆசிய பொருளாதாரங்கள், இளம் மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இது இல்லை. உதாரணமாக, இந்தியாவின் மக்கள் தொகை இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து மூப்படைதல் தொடங்கும்.

அரசு குடும்பத்தை துறக்கும், பிரின்ஸ் ஹாரியின் எதிர்காலம் என்ன ?

READ SOURCE