சிடெட் தேர்வு முடிவுகள் வெளியாகின, 22.55 சதவீதம் பேர் தேர்ச்சி
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. மொத்தம் 22.55 சதவீத வேட்பாளர்கள் சிடெட் தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் (CTET) முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்தது. கடந்த டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற தேர்வில், கலந்து கொண்ட தேர்வர்கள், சிபிஎஸ்சி அதிகாரப்பூர்வமான - ctet.nic.in என்ற வலைத்தளைத்தில் மூலம் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.
Advertisment
தேர்வு நடைபெற்று வெறும் 19 நாட்களுக்கும் இந்த முடிவு வெளியாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மதிப்பெண்ணைக் காண, தேர்வர்கள் பதிவு எண் (ரோல் நம்பரை) உள்ளிட வேண்டும் . சிடெட் முடிவுகள் திரையில் தோன்றும். பிற்கால தேவைகளுக்காக உங்கள் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள் .
இந்நிலையில், கான்பூரில் பரீட்சைக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு வினாத் தாள் கசிந்ததாகவும், அந்த வினா தாள் வாட்ஸ்அப்பின் மூலம் பரப்பப்பட்டதாக சில வடமொழி நாளிதழ்கள் தெரிவித்த செய்தியையும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மறுத்துள்ளது .
தேர்வு முடிவுகள் விவரம்: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் மொத்தம் 5.42 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அவர்களில் 2,47,386 நபர்கள் பேப்பர் ஒன்றிலும் , 2,94,899 நபர்கள் பேப்பர் இரண்டிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
மொத்தம் 22.55 சதவீத வேட்பாளர்கள் சிபிஎஸ்இ சிடெட் தேர்வை வெற்றிகரமாக முடித்துள்ளனர். வெற்றிகரமான வேட்பாளர்களில், 3,12,558 பெண்கள் மற்றும் 2,29,718 ஆண்கள் வேட்பாளர்கள்.