Board exams 2023 to commence from February 15th: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) இன்று 2023ஆம் ஆண்டிற்கான 10, 12 வகுப்பு தேர்வுகளுக்கான செய்முறைத் தேர்வு தேதிகளை வெளியிட்டது. மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அட்டவணையைப் பார்க்கலாம்.
அட்டவணையின்படி, இரண்டு வகுப்புகளுக்கும் செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2 முதல் பிப்ரவரி 14 வரை நடைபெறும். பள்ளிகள் மாணவர்களின் மதிப்பெண்களை ஒரே தளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இதையும் படியுங்கள்: JEE Exam 2023: தமிழக மாணவர்கள் இதைச் செய்தால் கூடுதல் நன்மை
தேர்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் செய்முறைத் தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின்படி, செய்முறைத் தேர்வுக்கான பாடத்திட்டம் முடிக்கப்படுவதையும், ஆய்வகங்களைத் தயார் நிலையில் வைத்தல் மற்றும் உள் தேர்வாளர்களை அடையாளம் காண்பது போன்ற தேவையான ஏற்பாடுகள் சரியான நேரத்தில் செய்யப்படுவதையும் பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும். 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வானது வாரியத்தால் நியமிக்கப்பட்ட வெளிப்புற ஆய்வாளர்களால் நடத்தப்படும்.
“பள்ளிகள் அனைத்து பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் தேர்வு அட்டவணைப் பற்றித் தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும், மாணவர்களின் பட்டியல் முழுமையாக சரிபார்க்கப்பட்டு ஆன்லைன் அமைப்பிலிருந்து குறுக்கு சோதனை செய்யப்பட வேண்டும். தேர்வுத் தேதிக்கு முன்னதாகவே போதுமான எண்ணிக்கையிலான செய்முறை தேர்வு விடைப் புத்தகங்கள் பள்ளிக்கு வந்துள்ளனவா என சரிபார்க்க வேண்டும். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், பள்ளிகள் பிராந்திய அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும், ”என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil