மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஒரு ‘ராப்’ தொடங்கிய முதல் வாரியம் என்று கூறுகிறது. பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் தேர்வுக்கான மன அழுத்தத்தை போக்கும் விதமாக தொடர்ச்சியான மீம்ஸைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்சி) சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.
Advertisment
தற்போது, ஒரு படி மேலே சென்று, ஒரு ‘ராப் இசை’ பாடலை வெளியிட்டுள்ளது சிபிஎஸ்சி. 'தேர்வு கீதம்' என்று பெயரிடப்பட்ட அந்த பாடல், சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் ராப்இசை பாடலை வெளியிட்ட முதல் வாரியம் என்ற பெருமையையும் சிபிஎஸ்சி பெற்றுள்ளது.
யூடியூபில் கிடைக்கும் இந்த பாடல், மன அழுத்தமில்லாமல் தேர்வு எழுதுவதற்கான உதவிக்குறிப்புகளை மாணவர்களுக்கு வழங்குகிறது. சரியான தூக்கம், மாலையில் சிறிய விளையாட்டு போன்ற பல அறிவுரைகள் பாட்டில் இடம் பெற்றுள்ளன. தேர்வு தொடர்பான எந்த வதந்திகளையும் நம்பவேண்டாம்/பரப்பவேண்டாம் என்றும் பாட்டில் கூறப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தலைவர் அனிதா கார்வால், தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ராம சர்மா ஆகியோரால் எழுதப்பட்ட இந்த பாடலை தேவாஷிஷ் பதக், கவுரவ் சர்மா ஆகியோர் பாடியுள்ளனர். சிபிஎஸ்இ மாணவர்களான சக்ஷாம் லால், ஸ்வர்னிம், நக்ஷத்ரா ஆகியோரும் பாடல் தயாரிப்பில் பங்கேற்றுள்ளனர்.
சிபிஎஸ்சி வாரியம் தற்போதெல்லாம், மாணவர்களை சென்றைடைய புதிய தொழில் நுட்பங்களை நன்கு பயன்படுத்திகிறது .
கடந்த ஆண்டு, தெலுங்கானா வாரிய தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க, சிபிஎஸ்இ ஹெல்ப்லைன் வசதியை அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள் 1800 11 8004 என்ற இந்த ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் செய்து நிபுணர்களுடன் பேசலாம். கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது. மார்ச் 30ம் தேதி வரை இந்த வசதி கிடைக்கும்.
தொலைபேசி ஆலோசனை (டெலி கவுன்சிலிங்), ஆடியோ காட்சி உள்ளடக்கம், கேள்வி-பதில் நெடுவரிசைகள் போன்ற பிற முயற்சிகளையும் சிபிஎஸ்சி செய்து வருகிறது