மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 2020-ல் இருந்து நடக்க இருக்கும் 10 மற்றும் 12-வது தேர்வு முறையில் புதிய மதிபெண் திட்டத்தின் கீழ் பெரிய மாற்றியங்களை செய்துள்ளது. இனி 10 மற்றும் 12 வது தேர்வுகளில் அணைத்து பாடங்களிலும் இருபது அப்ஜெக்ட்டிவ் டைப் கேள்விகளை கேட்கவிருக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவிக்கையில், அப்ஜெக்ட்டிவ் டைப் கேள்விகளுக்கான பதில்கள் ஒரு வரியில் இருந்தாலும் மிகவும் கடினமானது என்று சிபிஎஸ்சி மாணவர்களும் அவர்களுது பெற்றோர்களும் கருத்து தெரிவித்தனர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சி.பி.எஸ்.இ) 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வாரியத் தேர்வுகளுக்கான தேர்வு முறை மாற்றங்கள் குறித்து ஆசிரியர்களுக்கான வருடாந்திர கருத்துபரிமாறும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் இந்த மாற்றத்தைக் குறித்து கருத்து தெரிவிக்கையில், " இந்த 20 அப்ஜெக்ட்டிவ் டைப் கேள்விகள் கண்டிப்பாய் தாக்கத்தை உருவாக்கும். NCERT புத்தகத்தில் எந்த வரியையும் இதன் மூலம் கேள்வியாய் கேட்கலாம். மாணவர்கள் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கடந்து வரவேண்டும். அப்போது தான் இந்த வகையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியும்" என்றார்.