சிபிஎஸ்இ 2021-2022 கல்வியாண்டிற்கான அதன் திருத்தப்பட்ட மதிப்பீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு புதிய உள் மதிப்பீட்டு வழிகாட்டுதல்களை இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெளியிடும்.
சிபிஎஸ்இ இந்த ஆண்டுக்கான வாரியத் தேர்வை இந்த ஆண்டின் இறுதியில் நடத்தும் முறையிலிருந்து விலகிச் செல்வதாக அறிவித்துள்ளது, அதற்கு பதிலாக இரண்டு கல்வி பருவங்களாக (Terms) பிரித்து இரண்டிற்குமான தேர்வு ஆண்டு இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது. மாறிவரும் கொரோனா நிலைமை காரணமாக நான்கு வெவ்வேறு சாத்தியமான சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவுகள் எவ்வாறு இறுதியாக கணக்கிடப்படும் என்பதற்கான நான்கு நடைமுறைகளையும் சிபிஎஸ்இ உருவாக்கியுள்ளது.
கடந்த ஆண்டின் அனுபவத்திற்குப் பிறகு அதன் முந்தைய முறையைத் தொடர முயற்சித்த போதிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ய வேண்டியிருந்தது.
இது தவிர, "மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக வாரியத்தால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நடுநிலைக் கொள்கையின்படி உள் மதிப்பீடு, செய்முறைத் தேர்வுகள் மற்றும் திட்டப்பணிகளை (Project Work) மிகவும் நம்பகமானதாகவும் செல்லுபடியாக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்" என்றும் வாரியம் கூறியுள்ளது.
2020-2021 ஆம் ஆண்டிற்கான இந்த மதிப்பீட்டில், உள் மதிப்பீடு மற்றும் பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்களுக்கு மிக முக்கியமான கூறுகளாக மாறியது. மேலும் இது 2021-2022 ஆம் ஆண்டில் முக்கியமானதாக இருக்கும். ஏனெனில் கொரோனா பாதிப்புகளின் அதிகரிப்பால் இரண்டு டேர்ம் தேர்வுகளில் ஒன்று அல்லது இரண்டையுமே தேர்வு மையங்களில் நடத்த முடியாவிட்டால் இந்த மதிப்பெண்கள் முக்கியத்துவம் பெறும்.
"ஆண்டு முழுவதும் தொடர்ச்சியான மதிப்பீட்டின் நம்பகமான முறையை அறிமுகப்படுத்துவதே இந்த முயற்சி, இது NEP க்கு ஏற்பவும் அதிகம்" என்று ஒரு சிபிஎஸ்இ அதிகாரி கூறினார்.
புதிய மதிப்பீட்டுத் திட்டத்தின் படி, 9 மற்றும் 10 வகுப்புகளுக்கான ஆண்டு முழுவதும் உள் மதிப்பீடு 3 குறிப்பிட்ட கால தேர்வுகளை உள்ளடக்கியது. அவை “மாணவர் செறிவூட்டல், போர்ட்ஃபோலியோ மற்றும் செய்முறை வேலை, பேசும் கேட்கும் நடவடிக்கைகள், திட்ட பணிகள்” போன்றவையாகும். இதேபோல் 11 மற்றும் 12 வகுப்புகளுக்கு “ஒவ்வொரு பாட முடிவு தேர்வுகள் அல்லது அலகு தேர்வுகள், ஆய்வு நடவடிக்கைகள், செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள்”. ஆண்டு முழுவதும் நடத்தப்படும் அனைத்து மதிப்பீடுகளுக்காக பள்ளிகள் ஒவ்வொரு மாணவரின் சுயவிவரத்தை உருவாக்க வேண்டும்.
இந்த உள் மதிப்பீட்டு முறைக்கான முழுமையான வழிகாட்டுதல்கள் வாரியத்தால் பகுத்தறிவு செய்யப்பட்ட டேர்ம் வாரியான பாடத்திட்டத்தை வெளியிடும்போது வெளியிடப்படும். இந்த நடைமுறை இந்த மாதத்தில் சிபிஎஸ்இ வாரியத்தால் வெளியிடப்படும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil