மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) விரைவில் 2025 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதாரங்களின்படி, சி.பி.எஸ்.இ வாரியம் நவம்பர் 28, 2024 க்குள் அல்லது டிசம்பர் 2024 முதல் வாரத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தியரி தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும். அதற்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2025 இல் தொடங்கும், மேலும் சி.பி.எஸ்.இ குளிர்காலப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நவம்பர் 5 முதல் டிசம்பர் 5, 2024 வரை தொடங்கும்.
2024 ஆம் ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 வது தேர்வு முடிவுகளை வெளியிடும்போது, அடுத்த ஆண்டுக்கான தேர்வு 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கும் என்று சி.பி.எஸ்.இ வாரியம் உறுதிப்படுத்தியது.
சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை 2025 வெளியான பிறகு, அது சி.பி.எஸ்.இ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதாவது cbse.gov.in இல் வெளியிடப்படும்.
சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சுமார் 44 லட்சம் மாணவர்களுக்கு வாரியத் தேர்வுகள் நடத்தப்படும். சி.பி.எஸ்.இ போர்டு தேர்வில் பங்கேற்க விண்ணப்பதாரர்கள் 75% வருகைப் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு முடிவுகள் 2024, முந்தைய கல்வி அமர்வின் போது, பிப்ரவரி 15 முதல் மார்ச் 13, 2024 வரை நடத்தப்பட்டது, முடிவுகள் மே 13, 2024 அன்று வாரியத்தால் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“