CBSE CTET 2020 : மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சிடெட்) விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தும் காலக்கெடுவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நீட்டித்துள்ளது.
பிப்ரவரி 24 - மார்ச் 2 : 2020 ஆம் ஆண்டு சிடெட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை இன்றோடு முடிவடையும் என்று அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், இந்த காலக்கேடு தற்போது மார்ச் 2 வரை நீட்டிக்கப்படுவதாக சிபிஎஸ்சி வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்தும் சாளரமும் பிப்ரவரி 27 முதல் மார்ச் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சியைத் தந்துள்ளது
ஆர்வமுள்ள தேர்வர்கள் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்றால், ctet.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணபிக்கலாம்.
வரும் ஜூலை ஐந்தாம் தேதி, இந்த சிடெட் தேர்வுகள் நடைபெறும். பேப்பர் I காலை 9.30 மணி முதல் நண்பகல் வரையிலும், பேப்பர் II மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் நடைபெறும்.
பேப்பர் ஒன்றில் தேர்ச்சி பெறுபவர்கள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு கற்பிக்க தகுதியாவார்கள். மதியம் நடக்கும் பேப்பர் இரண்டில் தேர்ச்சி பெறுபவர்கள் 6- 8 வகுப்புகளில் கற்பிக்க தகுதியாவார்கள்.
விண்ணப்பம் செய்வது எப்படி?
ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான ctet.nic.in க்குச் செல்லவும்
ஸ்டேப் 2: ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்ற இணைப்பை கிளிக் செய்யவும்
ஸ்டேப் 3: விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யவும்
ஸ்டேப் 4: ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்றவும்
ஸ்டேப் 5: கட்டணம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். எனவே முறையாக தேர்வு கட்டணங்களை செலுத்த வேண்டும்
தேர்வுக் கட்டணம்:
- இரண்டு பேப்பர் தேர்வு கட்டணம் - ரூ .1200
- ஒருபேப்பர் மட்டும் என்றல் - ரூ .1000
சிடெட் தேர்வு: இந்தியாவின் ஆர்.டி.இ சட்டத்தின் படி, ஒருவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் ஆசிரியராக வேண்டும் என்றால் அவர் கட்டாயம் தகுதி தேர்வில் தேர்சிப்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆயரியர் தகுதி தேர்வை சமந்தப்பட்ட மாநிலங்களும், மத்திய இடைக் கல்வி வாரியமான சிபிஎஸ்சி யும் நடத்தி வருகின்றன. சிபிஎஸ்சி நடத்தும் தேர்வின் பெயர் சிடெட் (CTET) என்று அழைகப்படுகிறது. மாநில அரசு நடத்தும் தேர்வின் பெயர் டெட்(TET) என்றும் அழைக்கப்படுகிறது.