குடும்பத்தில் ஒற்றை குழந்தையாக இருக்கும் பெண் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ கல்வி உதவித் தொகை வருடாந்திரம் வழங்கி வருகிறது. ஒற்றை பெண் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களை ஊக்குவிப்பதற்கும், பெண் குழந்தைகள் உயரக்கல்வியைத் தொடர்வதற்கும் இந்த உதவித் தொகைத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
Advertisment
பத்தாம் வகுப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களை எடுத்து, 11 , 12ம் வகுப்புகளை சிபிஎஸ்சி சார்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு மாதாந்திரம் ரூ. 500 வழங்கப்படும்.
கலியமூர்த்தி ஐபிஎஸ் உரை: வீடியோ
Advertisment
Advertisements
இந்த வருடம், ஒற்றைக் குழந்தை உதவித் தொகைக்கு விண்ணப்பம் செயல்முறை கடந்த செப்டம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. அப்போது , விண்ணப்பத்திற்கான கடைசி தேதி அக்டோபர் 18 க நிர்ணயிக்கப்பட்டன.
ஆனால், தற்போது இந்த கடைசி தேதியை அக்டோபர் 31 வரை நீட்டித்துள்ளது சிபிஎஸ்இ.
இதனால், தகுதியுடைய மாணவிகள் CBSE Merit Scholarship for Single Girl Child இணைய தளத்திற்கு சென்று தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் கொடுத்து விண்ணப்பிக்கலாம். கேட்கப்பட்டுள்ள எல்லா தகவல்களையும் பாத்திரமாய் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை நிறைவு செய்யுங்கள்.
ஏதேனும் வினவல் இருந்தால், நீங்கள் scholar.cbse@nic.in என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் சந்தேங்கங்களை எழுதலாம்.