ஆசிரியர் அல்லாத பணி : சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியானது

தேர்வு குறித்த மற்ற தகவல்கள் வரும் நாட்களில் @cbse.nic.in என்ற இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

CBSE releases vacancies for non-teaching posts, check details
CBSE releases vacancies for non-teaching posts, check details

CBSE Invites Online Applications From Eligible Candidates: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பல்வேறு ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உதவி செயலாளர்(ஐ.டி), ஆய்வாளர் (ஐ.டி), ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர், மூத்த உதவியாளர், ஸ்டெனோகிராஃபர், கணக்காளர், ஜூனியர் அசிஸ்டென்ட், ஜூனியர் அக்கவுன்டன்ட் போன்ற பணிகள் அடங்கும்.

கடலோர மாவட்டங்களை மிரட்ட காத்திருக்கும் வடகிழக்கு பருவமழை :


இதற்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை வரும்  நவம்பர் 15 ஆம் தேதி தொடந்குகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான @cbse.nic.in  என்ற இணைய தளத்திற்கு சென்று வரும் டிசம்பர் 16ம் தேதி தேர்வர்கள் விண்ணக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பணிக்கான தேர்வு கணினி அடிப்படையிலான சோதனை (சிபிடி) மூலம் நடத்தப்படும். தேர்வு குறித்த மற்ற தகவல்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

 

விண்ணப்பிக்கும் செயல்முறை:

ஸ்டேப் 1: அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in க்கு செல்லுங்கள்.

ஸ்டேப் 2 : அந்த இணையதளத்திற்கு சென்ற பிறகு ‘ அப்ளிகேஷன் செயல்முறை ‘ என்பதனை கிளிக் செய்யுங்கள்.

ஸ்டேப்  3: பிறப்புச் சான்றிதழ், முகவரிச் சான்று, வயது ஆதாரம், மற்றும் கேட்கப்படும் பிற விவரங்களை கவனமாய் பதிவிடுங்கள்.

ஸ்டேப்  5: தேவைப்படும் ஆவணங்களை பதிவேற்றம் செய்த பிறகு, Submit என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

வயது, கட்டணம், தேர்வு பாடத்திட்டங்கள் , தேர்வு குறித்த  முக்கியத் தேதிகள் போன்ற மற்ற விவரங்கள் எல்லாம் – வரும் நாட்களில்  @cbse.nic.in என்ற இணையதளத்தில் வரும் நாட்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cbse invites online application for non teaching cbse post

Next Story
தொழில்முனைவோர் ஆவதே லட்சியமா உங்களுக்கு – இதோ உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திchennai, guindy industrial estate, Entrepreneurs Awareness,Job,Job Searching,Training,tally course, export and import training
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com