மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2019-2020 வகுப்புகளுக்கான 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை பதிவுமுறையை இந்த வருடம் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கியுள்ளது(CBSE/Reg/112510/2019) .
வழக்கமாக, அக்டோபரில் ஆரம்பிக்கும் இந்த பதிவு முறை இந்த வருடம் இரண்டு மாதாங்களுக்கு முன்பே, அதாவது ஆகஸ்ட் எட்டாம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
CBSE Class 9, 11 Admission Rules: சி.பி.எஸ்.இ. புதிய அறிவிப்பு, வரிசை கட்டும் அட்மிஷன் சிக்கல்கள்!
முன்கூட்டியே மாணவர் சேர்க்கை பதிவு செய்யப்படுவதால் தேர்வுகள் தொடர்பான நடவடிக்கைகளை திறமையான முறையில் செயல்ப்படுத்த பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ வாரியத்திற்கு ஒரு வாய்ப்பாய் அமையும் என்பதனால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ வாரியம் தெரிவித்துள்ளது.
CBSE/Reg/112510/2019 என்ற அறிக்கையில் உள்ள மற்ற முக்கிய விவரங்கள்:
- 2020 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்காக சம்பந்தப்பட்ட பிராந்திய சிபிஎஸ்இ அலுவலகங்களால் புதிய பள்ளி குறியீடுகள் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பள்ளி குறியீடுகளை மட்டுமே இனி அந்தந்த பள்ளிகள் பயன்படுத்தப்பட வேண்டும் .
- தற்போது, ஆன்லைன் பதிவு செயல்முறை மூலம் பெயர்கள் சமர்ப்பிக்கப்படும் மாணவர்களை மட்டுமே பிப்ரவரி / மார்ச் / ஏப்ரல் 2021 இல் நடத்தப்படும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வாரிய தேர்வுக்கு அனுமதி செய்யப் படுவார்கள்.
- பள்ளிகள் மாணவர்களின் தாய், தந்தை/பாதுகாவலர் ஆகியோரின் முழு பெயரை கவனமாக நிரப்ப வேண்டும். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்குவதால் பெயர் சுருக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
- மாணவர்களின் தாய், தந்தையின் பெயர் அரசாங்க பதிவில் உள்ளவாறு இருக்க வேண்டும். புனைபெயர், ஜாதிபெயர் பயன்படுத்தக்கூடாது.
- ஒன்பதாம்/பதினொன்றாம் வகுப்பு தேர்வுகள் இனி பள்ளிகளுக்குள்ளே பள்ளிகளால் மட்டும் நடத்தப்பட வேண்டும்.
9 மற்றும் 11 ஆம் வகுப்புக்கான பதிவு கட்டணம்:
பதிவு மற்றும் தேர்வுக் கட்டணம் (IX, X, XI, XII) பார்வைக் குறைபாடு உடைய மாணவர்களிடம் வசூலிக்கப்படமாட்டது.