சி.பி.எஸ்.இ கேள்வித்தாள் லீக் வீடியோ வைரல் – எஃப்.ஐ.ஆர் பதிவு

கடந்த வருடம் லீக்கான சி.பி.எஸ்.இ கேள்வித்தாள்களால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். 

By: Updated: March 7, 2019, 05:00:05 PM

சி.பி.எஸ்.சி பனிரெண்டாம் வகுப்பின் அக்கவுண்ட்ஸ், வேதியியல், ஆங்கிலம் மற்றும் பத்தாம் வகுப்பின் கணிதம், அறிவியல் ஆகிய கேள்வித்தாள்கள் லீக்காகியிருப்பதாக யூ-ட்யூபில் வெளியான ‘ஃபேக்’ வீடியோவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேள்வித்தாள்கள் லீக்காகி விட்டதாக வெளியான அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையே சி.பி.எஸ்.சி நிர்வாகம் இதன்மேல் நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இது குறித்து சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிக்கையில், “வலைதளத்தில் வெளியான அந்த வீடியோவின் ஆவணங்களை ஆராய்ந்ததில், அவை உண்மைக்குப் புறம்பானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேவையில்லாத பீதியைக் கிளப்பியுள்ளது. தனிப்பட்ட மற்றும் தொழில்முறை ஆதாயங்களுக்காக இப்படி  பொய்யான வீடியோவை பரப்பிய நேர்மையற்ற நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடம் லீக்கான சி.பி.எஸ்.இ கேள்வித்தாள்களால் சுமார் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கேள்வித்தாள் லீக் போன்ற பொய்யான விஷயங்களை மாணவர்களும், பெற்றோர்களும் நம்ப வேண்டாமென சி.பி.எஸ்.இ நிர்வாகம் முன்னதாக அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Cbse leaked question papers videos go viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X