பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நிலுவையில் உள்ள தேர்வை வரும் ஜூலையின் முதல் இரண்டு வாரத்தில் நடத்த சிபிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது. இது தொடர்பான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் இந்த வாரம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜே.இ.இ (மெயின்) நடத்தப்படுவதற்கு முன்பு 12-ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் முடிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. என்ஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜே.இ.இ முதன்மைத் தேர்வுகள் ஜுலை மாதம் 18, 20, 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. எனவே, அதற்கு முன், பன்னிரெண்டாம் வகுப்புக்கு மீதமுள்ள தேர்வுகளை முடிக்குமாறு சிபிஎஸ்இ-டம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடக்கநிலை காரணமாக முக்கியமான 29 படங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வை நடத்த உள்ளதாக ஏப்ரல் 1 ம் தேதி சிபிஎஸ்இ அறிவித்தது. இந்த 29 பாடங்களுக்கான தேர்வுகளும் போதுமான கால அவகாசம் அளித்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பைப் கலவரம் காரணமாக பரீட்சைக்கு வரமுடியாத வடகிழக்கு டெல்லி மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும்.
12 ஆம் வகுப்பிற்கு, சிபிஎஸ்இ வணிகவியல், புவியியல், இந்தி (கோர்), இந்தி (தெரிவுப் பாடம்), ஹோம் சயின்ஸ் , சமூகவியல், கணினி அறிவியல் (பழையது), கணினி அறிவியல் (புதியது), தகவல் பயிற்சி (பழையது), தகவல் பயிற்சி ( புதியது), தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர் தொழில்நுட்பம். இது தவிர, வடகிழக்கு டெல்லி கலவரத்தால் (குடியுரிமை திருத்தம் சட்டம் தொர்பாக ) தேர்வு எழுத முடியாத 12, 10ம் ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும். மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்ட விடைத் தாள்கள் திருத்தும் பணிகள் மீண்டும் முடிக்கி விடப்பட்டுள்ளன. திருத்துபவர்களின் வீட்டிற்கு நேரடியாக விடைத் தாள்களை வழங்கம் முயற்சிகளையும் சிபிஎஸ்இ யோசித்து வருகிறது.
ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் ஜே.இ.இ (அட்வான்ஸ்) தகுதி பட்டியலை அறிவிப்பதற்கு முன்பாக, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிபிஎஸ்இ மற்றும் அந்தந்த மாநில வாரியங்கள் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிவிக்கும் போது தான் ஐஐடி கவுன்சிலிங் செயல்முறை தொடங்கும். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற வேண்டும் என்றால், ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் போர்டு தேர்வுகளில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜேஇஇ (அட்வான்ஸ்) தேர்வு - 2020 ஆகஸ்ட் 23 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அகில இந்திய தரவரிசை பட்டியலை ஐ.ஐ.டி அறிவிக்க குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.