பொதுவாக, சிபிஎஸ்இ 10வது வாரியத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 9 வது படிக்கும் போதே அதற்கான பதிவுமுறையை செய்தாக வேண்டும் , அதேபோல், 12வது வாரியத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் 11 வது படிக்கும் போதே பதிவுமுறையை செய்திருக்க வேண்டும்.
இந்த முன்பதிவிற்கான முக்கிய நெறிமுறைகளையும், தகவல்களையும் (CBSE/Reg/112510/2019) என்ற ஆணை மூலம் வெளியீட்டது சிபிஎஸ்இ. இந்த ஆணையிலுள்ள பல்வேறு கேள்விகளை விளக்கும் விதமாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தற்போது ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உதரணமாக,
மாணவர்கள், தாய், தந்தை / பாதுகாவலர் ஆகியோரின் முழுப் பெயரை மட்டும் பள்ளிகள் நிரப்ப வேண்டும் என்றும், எதிர்காலத்தில் மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்காமல் இருக்க பெயர் சுருக்கத்தை தவிர்க்கப்பட வேண்டும், ” என்று சிபிஎஸ்இ அரசாணையில் இருந்தது.
தற்போது, இது குறித்த தெளிவு அறிக்கையில் சிபிஎஸ்இ கூறியிருப்பதாவது -
X/XII சிபிஎஸ்இ பாடத் தேர்வை முடித்த மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக் கழகத்தில் சேருவதற்கும், பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதற்கு பள்ளியில் அவர்களது மார்க் சீட்டில் பெயர்சுருக்கமாகவோ அல்லது பெயரில் தெளிவின்மையாய் இருந்தாலோ பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் . அதனால் தான், ஒன்பதாம் வகுப்பில் பதிவு செய்யும் போதே சுருக்கப் பெயர்களைத் தவிர்த்து மாணவர்கள், தாய், தந்தை / பாதுகாவலர் ஆகியோரின் முழுப் பெயரை நிரப்ப கேட்டுக் கொள்கின்றோம்.
இதனால்,
பத்தாம் வகுப்பு மாணவர், தாய், தந்தை / பாதுகாவலர் ஆகியோரின் பெயர் ஒன்பதாம் வகுப்பில் பதிவுசெய்யப்பட்டதைப் போலவே இருக்கும்.
XI வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே பத்தாம் வகுப்பில் மார்க்ஷீட் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் விவரங்கள் வழங்கப்பட்டிருப்பதால், XI வகுப்பு மாணவர்களின் விவரங்கள் பத்தாம் வகுப்பில் இருந்தே எடுத்துக் கொள்ளப்படும்.
பன்னிரெண்டாம்(XII) வகுப்பு மாணவர்களின் பதிவிற்கான முழுத் தகவலை பத்தாம் வகுப்பில் மார்க்ஷீட் மற்றும் தேர்ச்சி சான்றிதழ் இருந்தே எடுத்துக் கொள்ளப்படும். இதனால், பத்து மற்றும் பன்னிரெண்டாம் மாணவர்களின் தகவல்கள் இதனால் முழுமையாக ஒத்துப் போகும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.