சிபிஎஸ்இ கடந்த திங்களன்று 10 ஆம் வகுப்பு மற்றும் 12 மாணவர்களுக்கான தேர்வு கட்டண விதிமுறையில் மாற்றத்தை கொண்டுவந்தது. அதில், எஸ்சி/எஸ்டி பிரிவுகளில் உள்ள மாணவர்களின் தேர்வுக் கட்டணம் 24 மடங்காக உயர்த்தப்பட்ட செய்தி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பொது மக்கள் தரப்பிலிருந்தும், அரசியல் கட்சிகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல்கள் வந்த வகையிலே உள்ளன.
CBSE அதிரடி: எஸ்சி/எஸ்டி தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்வு
இந்நிலையில், திமுக கட்சியின் செயல் தலைவரான ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் சிபிஎஸ்இ-யின் கட்டண உயர்வைக் கண்டித்துள்ளார்.
இந்த தேர்வு கட்டண உயர்வின் மூலம் சமூக நீதி கேள்வியாக்கப் பட்டுவிட்டது, இதனால் மத்திய அரசாங்கம் உடனே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தனது ட்விட்டர் பதிவில், சிபிஎஸ்இ-யின் கட்டண உயர்வைக் கண்டித்துள்ளார். சிபிஎஸ்இ-ன் இந்த அறிவிப்பு மிகவும் அதிர்ச்சியளிப்பதாகவும், இதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.