CBSE 2024 Board Exams: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2024 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு ஒட்டுமொத்தப் பிரிவு, தனிச்சிறப்பு அல்லது மொத்த மதிப்பெண் சதவீதம் அல்லது தரவரிசையை வழங்காது. மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவில் மதிப்பெண்கள் மட்டுமே வழங்கப்படும். சி.பி.எஸ்.இ வாரியமானது மதிப்பெண்கள் சதவீதத்தைக் கணக்கிடாது, அறிவிக்காது தெரிவிக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் சதவீதத்தை கணக்கிடுவதற்கான அளவுகோல்களை தெரிவிக்க பல மாணவர்களிடமிருந்து கோரிக்கைகள் சி.பி.எஸ்.இ வாரியத்திற்கு வந்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE not to award overall division, distinction or aggregate in Class 10th, 12th board exams
ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் எடுத்திருந்தால், சிறந்த ஐந்து பாடங்களைத் தீர்மானிப்பதற்கான முடிவு, CBSE போர்டு மாணவர்களை சேர்க்கும் நிறுவனங்கள் அல்லது பணியமர்த்தும் நிறுவனத்தால் கணக்கிடப்பட்டுக் கொள்ளலாம், என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பில் மதிப்பெண்கள் சதவீதம் தேவைப்பட்டால், கணக்கீடு சேர்க்கை வழங்கும் நிறுவனம் அல்லது பணியமர்த்தும் நிறுவனத்தால் செய்துக் கொள்ளப்பட வேண்டும்.
இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ-இணைந்த பள்ளிகளுக்கும் 2023-24 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள் மற்றும் உள் மதிப்பீட்டை 2024 ஜனவரி 1 முதல் சி.பி.எஸ்.இ வாரியம் நடத்தும். CBSE தியரி தேர்வுகள் பிப்ரவரி 15, 2024 அன்று தொடங்கும். இருப்பினும், முழுமையான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“