CBSE Practical Exams 2024: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) இன்று பள்ளிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் 2024-ஐ சரியான நேரத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: CBSE Practical Exams 2024: Board issues important instructions for schools
"2023-24 ஆம் ஆண்டுக்கான 10, 12 ஆம் வகுப்புக்கான வருடாந்திர செய்முறைத் தேர்வுகள்/ உள் மதிப்பீடு/ திட்டங்கள் 2024 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, அதை உரிய நேரத்தில் முடிக்க, பின்வருவனவற்றை கடைபிடிக்க அனைத்து பள்ளிகளும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,” என சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
செய்முறைத் தேர்வுகளுக்குத் தேவையான நடைமுறை, அட்டவணை மற்றும் பிற குறிப்பிட்ட தேவைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்குமாறு பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மாணவர்கள் தங்கள் சோதனைகளைச் செய்வதற்கு ஆய்வகங்கள் அல்லது வசதிகள் போதுமான அளவில் அமைக்கப்பட்டுள்ளன என்பதை மீண்டும் உறுதிப்படுத்தவும்" என்று CBSE கூறியது.
பள்ளிகள் ஊனமுற்ற மாணவர்களை அல்லது சிறப்புத் தேவையுடையவர்களைக் கண்டறிந்து, செய்முறைத் தேர்வுகளில் அவர்கள் வசதியாகப் பங்கேற்பதை உறுதிசெய்யும் வகையில் தங்குமிடங்களை ஏற்பாடு செய்வது பள்ளிகளின் கடமை என்றும் சி.பி.எஸ்.இ வாரியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
”மதிப்பெண்களை பதிவேற்றம் செய்யும் போது, பள்ளி, உள் தேர்வாளர் மற்றும் வெளி தேர்வாளர் சரியான மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் மதிப்பெண்களில் எந்த திருத்தமும் அனுமதிக்கப்படாது," என்று சி.பி.எஸ்.இ வாரியம் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“