Advertisment

10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வு : மீதமுள்ள தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ மும்முரம்

இந்த நிச்சயமற்ற காலங்களில், மீதமுள்ள தேர்வைப் பற்றி யோசிப்பது மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் என்று மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.

author-image
WebDesk
Apr 29, 2020 16:11 IST
New Update
cbse class 10 sample question paper, cbse English 10th question paper, cbse English test syllabus, cbse, cbse.nic.in

பொது முடக்கத்திற்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள வாரியத் தேர்வுகளை நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தயாராக உள்ளது. பத்து நாட்கள் இடைவெளியில் வாரியத் தேர்வுகள் நடத்தப்படும் என்று மாநில கல்வி அமைச்சர்களுடன்  நடந்த காணொலி கூடத்தில் மத்திய மனிதவள அமைச்சர் தெரிவித்தார்.  உள் மதிப்பீட்டின் அடிப்படையில் 10,12ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை நிர்ணயிக்கலாம் என்று பரிந்துரையை மாநில அமைச்சர்கள் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

Advertisment

வாரியத் தேர்வின் விடைத் தாள்ககள் திருத்தும் பணிக்கு தேவையான ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு, ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்  நேற்று மாநில அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.

திருத்துபவர்களின் வீட்டிற்கு நேரடியாக விடைத் தாள்களை வழங்க சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. எனவே, மாநில நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று அமைச்சகத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமானதால், 10,12 ம் வகுப்புகளுக்கு நிலுவையில் உள்ள 41 தேர்வுகளில் வெறும் 29 தேர்வுகள் மட்டும் நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்தது. மேலும், விடைத் தாள்கள் திருத்தும் பணி  மார்ச் 18ம் தேதி நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்தது. 1 கோடிக்கும் அதிகமான விடைத்தாள்கள் திருத்துவதற்கு சுமார் ஒன்றரை மாதங்கள் தேவைப்படும்.

இந்த கலந்துரையாடலில், உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்று டெல்லி கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. டெல்லியில் செயல்படும் அனைத்து  அரசுப் பள்ளிகளும் சி.பி.எஸ்.இ வாரியத்தோடு இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

"சமூக விலகல் பின்பற்றிய வேண்டிய தேவை இருப்பதால், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, மீதமுள்ள வாரியத் தேர்வுகளை நடத்துவது சாத்தியமில்லை. மே-ஜூன் மாதங்களுக்குப் பின் தேர்வை  மேற்கொண்டால், அது அடுத்த கல்விச் சுழற்சியை பெரிதும் தாமதப்படுத்தும் ”என்று சிசோடியா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார். இந்த நிச்சயமற்ற காலங்களில், மீதமுள்ள தேர்வைப் பற்றி யோசிப்பது மாணவர்களின் நேரத்தை வீணடிக்கும் என்றும் தெரிவித்தார்.

வாரியத் தேர்வுக்கு முன்பாக  அந்தந்த பள்ளிகளால் நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில், 10-ம் வகுப்பு மாணவர்களை தேர்ச்சி செய்வது குறித்து  சிந்தித்து வருவதாக பஞ்சாப் கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா கூட்டத்தில்  தெரிவித்தார்.

பள்ளிகள் மூடப்பட்டதை கருத்தில் கொண்டு, பொது முடக்கத்திற்குப்  பிந்தைய நாட்களில் அரசு பள்ளி ஆசிரியர்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு கடமையில் ஈடுபடுத்தக்கூடாது என்று அசாம் மாநில கல்வித்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்தார். இதற்கு, உள்துறை அமைச்சகத்திடம்  முறையாக ஒப்புதல் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

கோடை விடுமுறை நாட்களிலும், மதிய உணவு (அ) அதற்கு சமமான உணவு பாதுகாப்பு கொடுப்பனவு தொகை மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அறிவித்தார். இந்த ஒரு முறை நடவடிக்கையால், மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ .950 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும்,சத்தீஸ்கர் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முடிவை, மாநில அரசுகளின் கையில் விட்டுவிட வேண்டும் என்று பரிந்துரைத்தன.

60-70 சதவீத மாணவர்கள் ஆன்லைன் கற்றல் வசதிகளை அணுக முடியும் என்று பல மாநிலங்கள் கூடத்தில் தெரிவித்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள  ஜவஹர் நவோதயா வித்யாலா நிறுவனங்களில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் குறித்த பல மாநிலம் கவலை தெரிவித்தது. தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூட்டத்தில் மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
#Coronavirus #Corona #Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment