ஃபிட் இந்தியா பள்ளி மதிப்பீட்டு திட்டம் – சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியானது

சிபிஎஸ்இ வாரியம் மாணவர்களின் உடற்தகுதியை, பள்ளிக் கல்வியோடு ஒன்றிணைக்கும் வகையில் ஃபிட் இந்தியா பள்ளி மதிப்பீட்டு திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

By: Updated: December 9, 2019, 10:31:06 AM

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ)  மாணவர்களின் உடற்தகுதியை பள்ளிக் கல்வியோடு ஒன்றிணைக்கும் வகையில் ஃபிட் இந்தியா பள்ளி மதிப்பீட்டு திட்டத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளும் அழைப்பு விதித்துள்ளது சிபிஎஸ்இ வாரியம்.

ஃபிட் இந்தியா பள்ளி மதிப்பீடு : 

கடந்த நவம்பர் மாதத்தில் , பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்கிற வானொலி நிகழ்ச்சியின் மூலம் ஃபிட் இந்தியா பள்ளி மதிப்பீட்டை அறிமுகப்படுத்தினார்.  ஃபிட் இந்தியா கொடி, ஃபிட் இந்தியா ஸ்டார் மதிப்பீடுகளுக்கு  (3ஸ்டார் , 5ஸ்டார் ) அனைத்து பள்ளிகளையும் சேர பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடற்பயிற்சி நிலைகள், கிடைக்கக்கூடிய உள்கட்டமைப்பு,  உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்பது ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு வழங்கப்படும்


 ஃபிட் இந்தியா கொடி, பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது:

1) உடற்கல்வியில் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருத்தர் கட்டாயம் பள்ளியில் இருத்தல் வேண்டும். அந்த ஆசிரியரின் உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.

2) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெளிப்புற விளையாட்டுகள் விளையாடும் வகையில் மைதானம் அந்த பள்ளிகளில் இருத்தல் வேண்டும்.

3) உடல் செயல்பாடுகளை தூண்டும் விளையாட்டு, நடனம், யோகா, போன்றவைகளுக்காக  தினமும் உடற்பயிற்சி கிளாஸ் ஒதுக்கப்படவேண்டும்

4) அனைத்து மாணவர்களும் ஒவ்வொரு நாளும் குறைந்தது 60 நிமிடங்கள் உடல் செயல்பாட்டுடன்  இருத்தல் வேண்டும் .

 மூன்று நட்சத்திர மதிப்பீட்டை அடைய, பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்:

1. பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் உடல் ஆரோக்கியம் உடையவர்களாகவும், குறைந்தது  60 நிமிடங்கள் உடல் செயல்பாட்டுடன் கூடிய செயலை செய்தல் வேண்டும்

2. பள்ளியில் இரண்டு விளையாட்டுகளை நன்கு அறிந்த பயிற்சி பெற்ற இரண்டு ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.

3. இரண்டு வெளிப்புற விளையாட்டுகள் விளையாடும்  அளவிற்கு மைதான கட்டமைப்பும், ஒவ்வொரு மாணவரும் குறைந்தது இரண்டு விளையாட்டுகளை விளையாடுபவராய் இருத்தல் வேண்டும் (அவற்றில் ஒன்று பாரம்பரிய / சுதேச விளையாட்டாக இருக்கலாம்.)

 ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற, ஒரு பள்ளி பின்வரும் அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்: –

1. பள்ளி ஒவ்வொரு மாதமும் விளையாட்டு போட்டிகளை ஏற்பாடு செய்யவேண்டும், பள்ளிக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்க வேண்டும், ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாட வேண்டும் ;

2. அனைத்து ஆசிரியர்களுக்கும் உடற்கல்வியில் பயிற்சி பெற்றவராய் இருத்தல் வேண்டும்;

3. பள்ளியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டு ஆசிரியர்கள் இருக்க வேண்டும், (அவர்கள் உடற்கல்வி ஆசிரியர்களாக இருந்தாலும் சரி );

4. பள்ளி என்.சி.இ.ஆர்.டி / பள்ளி வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட உடற்கல்வி பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும் ;

5. அனைத்து குழந்தைகளின் வருடாந்திர உடற்பயிற்சி மதிப்பீட்டை அளவிட வேண்டும் . பள்ளி நேரத்திற்குப்  பிறகு தனது மைதானத்தை  மற்ற சமூக மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் . பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக நியாயமான கட்டணம் வசூலிக்கப்படலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Education-jobs News by following us on Twitter and Facebook

Web Title:Cbse requested all affiliated schools to participate in fit india school falg and fit india school rating

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X